பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15lமுருகுசுந்தரம் றம் ஏற்பட்டது என்ருலும்-அதைவிட அந்தச் சங்கத் தாருக்கு-நான் ஏமாற்றம் ஏற்படக் காரணமாகி விட்டேன் என்பதை எண்ணி வருந்தினேன். பின்னர் கவிஞரைக் காணச்சென்றேன். அவரும் அதைக்கேட்டு வருந்தினர். ஆல்ை உடனே ஆறுதலும் கூறி ஊருக்கு அனுப்பி வைத்தார். புதுவைச் சங்கத்தாரும் பரிசுகளைத் தந்து வாழ்த்தி அனுப்பினர். இருபது ஆண்டுகளுக்குப் பின்-அப்பொழுது நான் எழுதிப்பரிசு பெற்ற கட்டுரை யைக் கூட எனக்கு அனுப்பிவைத்தனர் என்பதும் குறிப்பிட வேண்டியதாகும். ஆசிரியர் வேலை அடுத்து 1944 இல் அண்ணுமலையில் பட்டம் பெற்று. சென்னைப் பச்சையப்பன் கல்லுரியில் ஆசிரியராகம் பணியும் பெற்றேன். அந்த ஆண்டுகளில் ஒன்றிரண்டு தமிழ்ச்சங்க விழாக்களில்-புரட்சிக் கவிஞருடன் நானும் பேசினேன். அடுத்த ஆண்டு நிகழ்ந்த என்னுடைய திருமணத்திற்குத் தந்தை பெரியார் தலைமை ஏற்கபுரட்சிக் கவிஞரும்-அறிஞர் அண்ணுவும் மற்றவர்களும் வாழ்த்துறை வழங்குவர் என்று அழைப்பிதழ் வெளி யிட்டிருந்தேன். புரட்சிக்கவிஞர்-வர இயலாதநிலையில் ஒர் அருமையான வாழ்த்து அனுப்பியிருந்தார். புரட்சிக் கவிஞர் என்னிடத்தில் வைத்திருந்த பேரன்பும்-பெரும் நம்பிக்கையும், அந்தக் கவிதை வரிகளில் நடனமிட்ட மொழிப்பற்றும்-இனப்பற்றும்- இயக்க ஆர்வமும் தொண்டுணர்வும்-எப்படி யெல்லாம் கவிஞரால் மதிக் கப்பட்டன என்பதற்கு அந்தக் கவிதை வரிகளே சான்று. அடுத்து அவர் சென்னைவரும் வாய்ப்புள்ள போது என்னையும் சந்திக்க விழைவார். ஓரிரு முறை நண்பர் செல்லப்பா அவர்களின் பாசி நிலை யத்திலும்- தருவல்லிக்கேணியில் த்ருவாரூர் சுய மரியாதை வீரம் டி.என். இராமன் அவர்கள் தங்குமிடத் திலும் கவிஞர் தங்குவார். ஒரிருமுறை அந்நாட்களில் கலை உலகில் செல்வாக்குப் பெற்றிருந்த கவிஞர் கம்ப தாசன் அவர்களோடும் எனது இல்லத்திற்கு வருவார். சிறிதுநேரம் உரையாடி விடைபெறுவார்கள். ஒருமுறை கம்பதாசன் அவர்கள், பாவேந்தரிடம்