பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


159|முருகுசுந்தரம்

  • பாவேந்தர் பாரதிதானைப் பலமுறை சந்தித்துப்பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவரிடம் அரசியல், இலக் கியம் பற்றி உரையாடியிருக்கிறேன். திராவிடர்க்கழக ஆண்டு விழாவுக்குப்பாவேந்தர்அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இரண்டு மூன்று நாட்கள் என் வீட்டில் தங் கிர்ை. அந்த ஆண்டு விழாவுக்கு நோட்டீசு அவரால் தான் எழுதப்பட்டது. அந்த ஆண்டு விழா திருச்செங் கோடு சூரசம்ஹாரமடத்தில் நடைபெற்றது. பாரதி தாசன் எழுதித் திருமதி குஞ்சிதம் குருசாமியால் பதிப் பிக்கப் பெற்ற பாரதிதாசன் கவிதைகள் முதல்தொகுதி" அந்த ஆண்டுவிழாவில் வெளியிடப் பட்டது.

பாரதிதாசனுக்குத் திருச்செங்கோடு வட்டத்தில் நிதி திரட்டும் பொறுப்பு என்னிடம் தான் ஒப்படைக்கப் பட்டது. கரூர்க்கட்டிபாளையத்தில் நடை பெற்ற அவரு டைய மூத்த மகள் திருமணத்துக்குச் சென்றிருந்தேன். அவர் சேலத்தில் இன்ப இரவு நாடகம் நடத்தியதும், பெரியார் திருமணத்தின்போது அவர் அறிக்கை விட்டதும் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன.அவரோடு பழகிய நாட்களில், என்உள்ளத்தில் பசுமையாக நிற்கும் படி ஒரு நிகழ்ச்சி நடை பெற்றது. அதை என்னல் என்றும் மறக்க முடியாது. ஒரு முறை ஈரோடு ரயில் நிலையத்தில் நானும், பாவேந் தரும் நாமக்கல் செல்லப்ப ரெட்டியாரும் நின்று கொண்டிருந்தோம். பாவேந்தருடைய சட்டைப்பையில் இருந்த ரு 150|= ஐ எவனே பிக் பாக்கெட் அடித்து விட்டான். பாவேந்தர் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தார். கூப்பிட்டால் பேசவில்லை. பிறகு உணர்வு திகும்பிய அவர், எங்களைப்பார்த்து, 'நான் மிகவும் எச்சரிக்கையோடும் சுய உணர்வோடும் தான் இருந்தேன். எப்படி என்னிடம் அவன் களவு செய் தானென்று புரியவில்லை. எப்படிப் பட்ட கலைஞன் அவன்?' என்று வியப்போடுகூறினர். நான் அப்போது பாரதிதாசன் என்ற மனிதன்ைக் காணவில்லை; ஒரு கவிஞனைக் கண்டேன். செல்லப்பரெட்டியார் எங்கள் மூவருக்கும் டிக்கட் எடுத்தார். so