பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈரோடு காமராசர் மேல்நிலைப் பள்ளியில் தலைமை யாசிரியராகப் பணியாற்றும் முருகுசுந்தரம் தமிழ் இலக்கிய மேடைதொறும் தம் கவிதைகளை மெல்லிய பூங்காற்ருய் வீச வைத்த புதுமைக்கவிஞள். பாவேந்தர் குயிலி'லும் சுரதாவின் கவிதை இதழ்களிலும் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்ட முருகு கடைதிறப்பு’ என்னும் தொகுதி மூலம் கவிதையின் நல்லழகை எவரும் எளிதில் வசப்படும் வகையில் அறிமுகப்படுத்தியவர். 'பணித்துளிகள்’-தமிழக அரசின் பரிசு பெற்ற இவரது ుల్టర్థి தொகுதி. தீர்த்தக் கரையின்ரிலே’ அன்னம் மூலம் வெளிவந்த இவரது புதுக்கவிதைத் தொகுதி. பாவேந்தரின் பர்ம்பரையைச் சேர்ந்த இவர் பாவேந்தரைக் கண்டும் கேட்டும் அறிந்த நிகழ்ச்சிகளைப் பாவேந்தர்' னைவுகளர்க்கியுள்ளார். ஒரு கவிஞன் இறந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் அவனைப் பற்றிய வரலாறுகள் எல்லாம் எழுத்தில் வந்துவிட வேண்டும். ஏனென்ருல் இருபத்தைந்து ஆண்டுகளுக்குள் அக்கவிஞ்ஞேடு நெருங்கிப் பழகிய தலைமுறை மறைந்துவிடும். அதன் பிறகு எழுதப்படும் நூல்களுள் புனைந்துரை இடம் பெற்றுவிடும்’ என்று கருதி பாவேந்தரோடு ឃ្លា அன்பர்களிடமிருந்து திரட்டிய செய்திகளை புதுவைக் கல்லறையில் புதியம்லர்கள்’ என்னும் நூலாக்கியுள்ளார். இது பாவேந்தர்நினைவுகள் வரிசையில் வரும் நான்காவது நூல்.