பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறைவில் 18 கொண்டிருந்த பேரன்பு (பக்தி என்று கூடக் கூறலாம்) காரணமாக ஒரு பெரிய உணவு விடுதிக்குக் கவிஞரை அழைத்துச் சென்று உயர்ந்த மதுவகைகளே எல்லாம் அவரைப் பருகு மாறு செய்தார். கவிஞருடன் நானும்-மற்ருெரு தேசிய வார ஏட்டின் ஆசிரியரும் உடன் சென்றிருந்தோம். கம்பதாசன், கவிஞர் போதும் என்ருலும் விட்ாது வற்புறுத்தி நிரம்பப் உருகுமாறு செய்துவிட்டார். அப்போது கம்பதாசன் நூறு ரூபாய் நோட்டுகளாகச் செலவிடும் வாய்ப்புப் பெற்றிருந்த காலம். என்_வருமானமெல்லாம் கவிஞ. ருக்கே! என் குருநாதருக்கே! என்று அவ்வப்போது முழங்கியபடி - ஆர்வத்தோடு செலவிட்டார். விடுதி விலிருந்து ஒரு பெரிய காரில் வீடு வந்தோம்! வரும் வழி விலேயே...கவிஞருக்குக் குமட்டல் ஏற்பட்டு வாந்தி "எடுத்தார். அப்பொழுது அவர் என்ன நோக்கிக் கூறி ர்ை-'தம்பி கம்பதாசன் என்னிடத்தில் அன்புள்ளவன் -எனக்கும் இது பழக்கந்தான். ஆனால் அவன் உன்னை அழைத்தால் நீ அவனுடன் போகவேண்டாம். இது (குடி) எல்லாம் உனக்கு ஒத்துக்கொள்ளாது - என்ன் நான் சொல்றதை மறந்து விடாதே-நான் வருகிறேன்’ என்று புறப்பட்டுச் சென்ருள் அவர். தமக்கு மது, பழக்க மான ஒன்று என்ருலும்-என்னிடத்தில் வைத்திருந்த அன்பினுல் கூறிய அறிவுரை என்பதை நான் மறுக்க வியலாது. இந்நிகழ்ச்சி 1947 இல் நிகழ்ந்தது. அதற்கு முதல் ஆண்டுதான் புரட்சிக்கவிஞரின் சீரிய 蠶 தொண்டினைப் போற்றி-நிதியளிப்பு விழா ஒன்று அறிஞர் அண்ணுவின் பெரும் முயற்சியாலும், நாமக்கல் செல்லப்பர்-திருவாரூர் டி. என். இராமன் முதலாளுேர் உழைப்பாலும் நிகழ்ந்தது. அதுகாறும் தமிழகத்தில்-அப்படிப்பட்டதொரு விழாவோ-நிதி யளிப்போ எந்தக் கவிஞருக்கும் நடைபெற்றதில்லை. அண்ணுவால் சிறப்புற்றது ந்தப் பணியில் நானும் பங்குபெற்றிருந்தேன். ன்ே பெருமை சுடர் விட்டுப் புகழ்ஒளி பரப்பிய காலம் எனினும், அறிஞர் ஆண்ணுவின் ஆர்வத்தாலும் ஆதரவினலும் அந்த விழா பெருஞ்சிறப்புற்றது.