பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17lமுருகுசுந்தரம் ஆயினும் கவிஞர் அவர்கள் எதையும் பொறுமையாக எண்ணிப்பார்த்திடும் இயல்பினர் அன்மையின் அந்த விழா நடத்தியவர்களைக் குறித்தே குறைகாண முற் பட்டார். அதனை ஓரிரு சமயங்களில் என்னிடத்தும் உரைக்கலானுர். அதையுங்கூடப் பக்குவமாகக் கூருது கடுமையான சொற்களையும் பயன்படுத்தி விடுவார். அவரது இயல்பை அறிந்திருந்த நான் அதற்காக அவரைக் கண்டித்து ஏதும் பேசவில்லை, எனினும்-தங் களைப் பாராட்டிப் போற்றி நிதியளித்து வாழ்த்தியவர் களைக் குறித்துத் தாங்களே இப்படிப் பேசுவது சரியல்ல; தேவையுமல்ல என்று விளக்கிக் கூறினேன். அதனை, ஏனே அவர் ஏற்கவில்லை. ஆனுலும் என்னை அறிந் திருந்த அவர், கோபித்துக் கொள்ளவில்லை என்று தான் நான் ஆறுதல் பெற்றேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றும் கட்டம் உருவாகியது. அந்நிலையில் புரட்சிக் கவிஞர் அவர்களும் குத்துர்சி குருசாமியார் அவர்களும் தந்தை பெரியார் அவர்களிடம் மாறுபட்ட நிலையில்-அவரிடம் உரிமைக்குப் போராடவேண்டும் என்று வலியுறுத்தினர். அதனை அண்ணு அவர்களும் என்போன்ற தோழர்களும் ஏற்கவில்லை. புரட்சிக் கவிஞரின் இயல்பு, ஒன்றைப் போற்றினும் எல்லையில்லாத அளவு போற்றிப் புகழுவார். ஒன்றில் மாறுபடினும் போற்றுதலின் மறு எல்லைக்கே செல்வார். இரண்டிலும் அண்ணு அவர்கள் ஆள வறிந்தே ஈடுபடுவார். எனவே கவிஞர் உள்ளத்தில், அண்ணுவிடமும் எங்களிடமும் மாறுபாடு ஏற்பட்டது. “பெரியாரின் போக்குத் தவறு என்ற பின்னர்,எதிர்த்துப் போராடத் துணிவில்லாத இவர்கள் கோழைகள்" என்ருர் கவிஞர். - ஆளுல் அதற்காக, அண்ணு அவர்கள் தமது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. அண்ணு அவர்கள் கவிஞரைப் பற்றிக் கூறியது அவர் தலைசிறந்த கவிஞர். ஆல்ை ர் அரசியல் கட்சியை எப்படி நடத்திச் செல்ல வேண்டும் என்பது அவருக்குப் பழக்கமில்லாதது. மேலும் புதுச்சேரி அரசியல் போலவே எங்கும் நடத்த