பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 24 கவிஞனின் உள்ளத்து உணர்வை கவிதையாகவடிக்கும் நிலையில் இயல்பாக வரும் சொல்லை விட்டுவிட்டு, தனித்தமிழ்ச் சொல்லாகத் தேடிப் பயன்படுத்துவது என்பது கவிதையின் உணர்ச்சி வேகத்தைத் தடைப் படுத்தி அதன் அழகைக் குறைத்துவிடும். 'கவிதை' செய்யப்படுவதல்ல- அது உள்ளத்தின் வெள்ளப் பெருக்கு. அது எப்படி வருகிறதோ-அப்படியே அமை' வதுதான் அதற்குச் சிறப்பு. தனித்தமிழ், உரை நடைக்கு, பேச்சுக்கு வேண்டியதே. ஆளுல் கவிதைக்கு ஒத்துவராது ' என்ருர் கவிஞர். கவிதை மன்னரிடம் மறுப்புக் கூற எங்களில் யாருக்கும் துணிவில்லை. சிறிது நேரம் வேறு ஏதோ பேசிய பின்னர், தாங்கள், தனித்தமிழ் நடை கவிதைக்குத் கூடாது என்கிறீர்களா? இயலாது என்கிறீர்களா?' என்று நான் ஒரு ஐயம் எழுப்பினேன். கூடாது என்பது அல்ல. அப்படிக் கூற முடியாது. இயலாது என்றுதான் சொல்லலாம். கவிஞர்கள் உளப்பாங்கும் வேறுபடும். உணர்ச்சிப் பிழம்பாகக் கவிஞன் ஒன்றை உள்ளத்தில் கருக்கொண்டு உயிர்க்கும் போது, எந்த நடையில் அந்தக் கருத்து ஏறி வருகிறதோ, அதுவே பொருத்தம் உடையது, அதை மாற்றுவது foLuff (Repair) செய்வது போலாகிவிடும்’ என்ருர் கவிஞர். "அது உண்மை. ஆனல் உணர்ச்சி ஊட்டும் வண்ணச் சொற்கள் தமிழில் இல்லை-என்று கருதலாமா?' என்று கேட்டேன். அப்படிச் சொல்லவில்லை. அந்தச்சொல் எதுவானுலும் பாட்டோசையோடு பொருந்தி நிற்பதாக வேண்டும் அல்லவா? உரைநடை போல் கவிதையை நடைமாற்றம் செய்யமுடியாது’’ என்ருர், 'உரை நடையோ, கவிதையோ இரண்டும் எண்ணத்திற்குத் தரும் வடிவம் தானே?’ என்றேன். 'பளிச்சென்று மின்னல்போல் தோன்றும் கவிதை, வெளியே புறப்பட உடை தேட முடியுமா?’ என்ருர். . "ஆல்ை. சில சொற்கள் பளிச்சென்று வேற்றுமொழி யாக இருக்கின்றன்வே-தகத்தகாயம், சபாஷ், நிஜம். பிரசங்கம், உத்ஸ்ாகம், கூேடிமம். நிரபராதி, போசனம் போன்ற சொற்கள் தவிர்க்க முடியா