பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


27iமுருகுசுந்தரம் தவிர்தல் வேண்டும்! தமிழ்ப் புலவர் தனித்தமிழில் நாடகங்கள் படக்கதைகள் எழுத வேண்டும்! பாவேந்தர் பாட்டெல்லாம் இன்று தனித்தமிழ் காக்கும் படையாக விளங்குதலைப் பல்லாற்ருனும் காணும் போது-பாவேந்தர் தமக்காக அன்றித் தமிழுக்காகவே வாழ்ந்தவர் என்னும் உண்மையை உணர்ந்து உவகை பெறுகிருேம் நாம்! "தழிழுக்கு அமுதென்று பேர் -ஆந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்னும் உணர்வைத் தந்த பாவேந்தர் மறைந் தாரில்லை; அந்தத் தமிழ் உணர்வாகவே நம்முடன் வாழ்கின்ருள்! வாழ்க பாவேந்தர் உணர்வு' வெல்க தனித்தமிழ் இயக்கம்!!