பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


31lமுருகுசுந்தரம் தொண்டர் வரலாற்றையும், இயற்பகை நாயனர் வர லாற்றையும் கடுமையாகச் சாடினர். 'தென்னுடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்ற தொடரை எடுத்துச் சொல்லி நகை யாடினர். 'எந்நாட்டவர்க்கும் உரிய சிவன் பெரிய சிவன்? தென்னுட்டுச் சிவன் குள்ளச் சிவளுே?’ என்று கேலி செய்தார். திருவாளர் சோமசுந்தரம் செட்டியார் இரசிகமணி டி.கே. சிதம்பரநாதமுதலியார் குழுவைச் சேர்ந்தவர். பாரதிதாசன் கோளுப்பட்டுக் கூட்டத்தில் சைவத்தைக் கேலி செய்து பேசியதைக் கேள்விப்பட்டுக் கொதிப் படைந்தார். அடுத்த கூட்டத்தில் எங்கள் சிவனைக் குள்ளச் சிவன்!" என்று ஒருவன் இழித்துப் பேசி ளுைமே!’ என்று பாரதிதாசனைச் சாடிஞர். பாவேந்தர் அப்போது செட்டிநாட்டில் தான் இருந்தார். காடுை காத்தானில் திருவாளர் வை.சு. சண்முகஞ் செட்டியார் இல்லத்தில் தங்கியிருந்தார். திரு.வை.சு.ச. அவர் களும் , அவர் துணைவியார் மஞ்சுளாபாயும் பாரதிதாசனிடத்தில் அளவு கடந்த பற்றும், மதிப்பும் கொண்டவர்கள். பாரதிதாசன் செட்டி நாட்டில் தங்கியிருந்தபோது அவர் விரும்பியபோதெல்லாம், திடீரென்று எங்கள் இல்லத்துக்கு வருவார். தன் மான இயக்கத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர்பட்டாளம் எப்போதும் அவரைச் சூழ்ந்திருக்கும். என் மனைவி அலமேலு எல்லாருக்கும் விரைவில் விருந்து சமைத்துப் பரிமாறுவாள். பாரதிதாசன் கோளுப்பட்டில் தங்கியிருந்த போது, "வீரசுதந்தரம் வேண்டிநின்ருர்’ என்ற பாரதியின் பாடலை பாரதி எந்த ராகத்தில் எப்படிப் பாடினரோ அதே ராகத்தில் உணர்ச்சி பொங்கப் பாடிக் காட்டினுள். இப்போது பாடும் ராகம் தவறு என்று குறிப்பிட்டார். பாரதியைப் பற்றி மேலும் குறிப்பிடும் போது 'பாரதி பெரிய புரட்சிக்க்ாரர். சீர்திருத்தச்செம்மல். பாரதியைப் பற்றி வைதீகச் சார்பான சில செய்திகளைப் பலர் கூறு வார்கள். அந்தக்காலத்தில் பாரதிக்குமேல் சீர்திருத்த