பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|34 அமைப்பை ஏற்படுத்துவதென்று முடிவுசெய்யப்பட்டது அந்த அமைப்பில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் செட்டி நாட்டு இளைஞர்களான முருகுசுப்பிரமணியமும், பெரியண்ணனும் ஆவர். முதலில் பாரதிதாசனின் இயல், இசை, நாடகப் படைப்புக்களை இன்ப இரவு' என்ற பெயரில் அரங்கேற்றம் செய்ய முடிவு செய்யப் பட்டது. சென்னையில் முத்தமிழ் நிலையத்தின் தலைமை யகத்தை நிறுவ எல்லாரும் முடிவு செய்தனர். முத் தமிழ் நிலையப் பணிகளை முன்னின்று நடத்துவதற்கும் அதை மேற்பார்ப்பதற்கும், என்னை வரும்படி பாரதிதாசன் அழைத்தார். நானும் சென்னை செல்ல வேண்டும் என்ற விருப்பத்தில் இருந்ததால், அவர் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். சென்னை செல் வதற்கு என்னைத் தூண்டிய அடிப்படைக் காரணங்கள் பல உண்டு. நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் சுயமரியாதைக் காரளுக' இருப்பது எவ்வளவு தொல்லையானது என்பதைப் பட்டு அறிந்தவர்களே உணர்வர். அவன் கடவுளுக்கும், சமயத்துக்கும் எதிரியாகக் கருதப் பட்டான். நான் கோனப்பட்டில் வாழ்ந்த போது பார்ப் பனருக்கு மட்டுமல்லாமல், செட்டிமார்களுக்கும் நான் எதிரியாகக் கருதப்பட்டேன். தன்மான உணர்வும், தமிழ் உணர்வும் கொண்ட செட்டிநாட்டிளைஞர் கள் என் பக்கம் இருந்ததால், என்னையாரும் ஒன்றும் செய்யமுடியவில்லை. நான் சைவப்பிள்ளைமார் குலத்தில் பிறந்தவன். என் மனைவி அலமேலுவல்லம்பர்(வல்லத்துவேளாளர்என்றும் கூறுவர்) வகுப்பைச்சேர்ந்தவள். கலப்பு மணம் செய்து கொண்ட காரணத்தால், சாதி எதிர்ப்பும் எனக் கிருந்தது. 1943 ஆம் ஆண்டில்-பாரதிதாசனின் செட்டிநாட்டு வருகைக்கு முன்-கோனுப்பட்டில் 10 நாட்கள் தமிழ் விழா ஒன்று நடத்தினுேம். அந்த விழாவிற்குத் தலைமை தாங்கவேர், சொற்பொழிவாற்றவோ யாரும் முன் வரவில்லை. முதல் மூன்று நாட்களும் நானே தலைவன்; தானே பேச்சாளன். கூட்டமும் குறைவாகத் தான் இருந்தது. தமிழ்ச்சுவையுணர்ந்த செட்டி மக்கள்