பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்/86 முயற்சியில் பெரியார் ஈடுபட்டிருந்தார். அண்ணுவைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப் பெரியா ருக்கு விருப்பமில்லை. எனவே திங்களுக்கு ரூ.600/= சம்பளத்தில் என்னைப் பொதுச் செயலாளராகப் பெரியார் நியமனம் செய்தார். என்னைப் பொதுச் செயலாளராகப் போட்டதற்குக் கட்சியில் எதிர்ப்புக் கிளம்பியது. எனவே நான் அப்பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண் டேன். அதன் பிறகு நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டார். நெடுஞ்செழியனுக் கும் கேட்ட சம்பளம் வராத காரணத்தால், அவரும் அப்பதவியிலிருந்து விலகி விட்டார். அதன் பிறகு அண்ணு சம்பளமில்லாமல் பொதுச்செயலாளர்பதவியை ஏற்ருர், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி நடத்திக் கொண்டிருந்த லிபரேட்டர் ஏட்டில் எனக்குத் &তষ্ঠা 醬 கிடைத்தது. குத் து முத்தமிழ் நிலையத்தில் 'இன்ப இரவு' நாடக ஒத்திகை நாள்தோறும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டிருந் தது. சென்னையில் குடியிருக்க ஒரு வீடு பார்த்துக் கொண்டு, அலமேலுவை அழைத்து வரக் கோளுப்பட்டு சென்றேன். சென்னை வாழ்க்கை சென்னை அருணுசல ஆசாரித் தெருவில் 12 ஆம் எண் வீட்டில் நான் குடியேறின்ேன். பாரதிதாசனும் தொடர்ந்து பத்துத் திங்கள் எங்கள் வீட்டிலேயே இருந்தார். அப்போது பெரியாரைத் தவிர, இயக்கத் தைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும், தொண்ட்ர்களும் பாரதிதாசனக் காண என் இல்லம் வருவர். திரு வாளர் ம.பொ.சி போன்ற மாற்றுக் கட்சித் தலைவர் களும், எழுத்தாளர்களும், பாவலர்களும் பாரதிதாசனைக் காண வருவதுண்டு. பாரதிதாசன் எங்கள் இல்லத்தில் தங்கியிருந்தபோது தான், அவருக்குப் பொற்கிழி வழங் கும் விழா நடை பெற்றது. ர்ொக்கமாக ரூ25,000!= அவருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தின் தலைசிறந்த தமிழ் அறிஞர்களும், அரசியல் தல்ைவ்ர்களும், கலைஞர் களும் அவ் விழாவில் பங்கு கொண்டனர். தமிழகத்தில் வேறு எந்தக் கவிஞருக்கும் இவ்வளவு சிறப்பாக் நிதி யளிப்பு விழா நட்ை பெற்றதில்லை.