பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87 முருகுசுந்தரம் நிதியளிப்பு விழாவில் பெற்ற தொகையைப் பாரதிதாசன், என் மனைவி அலமேலுவிடம் தான் கொடுத்து வைத்திருந்தார். ரூ25,000/= என்பது அக்காலத்தில் மிகப்பெரிய தொகை. பாவேந் தருக்கு நிதி கிடைத்ததும், அவருடையதுணைவி யார் திருமதி பழனியம்மாளும், பெண்களும் என் இல் லம் வந்தனர். பெண்களுக்குக் கொஞ்சம் நகைகளும், நல்ல புடவைகளும் எடுக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர். சீர்திருத்தக்காரரான பாவேந்தர், பெண்கள் நகையணிவதையும், ஆடம்பரமாக உடை யுடுத்துவதையும் வெறுப்பவர். என்ரு லும், அவ ரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி ரூ.7000 = க்கு நகைகளும் புடவைகளும் வாங்க இசைவு பெற்ருேம். நானும் அலமேலுவும் உடன் சென்று பாவேந்தரின் துணைவியாருக்கும், மக்களுக்கும் தேவையான நகை களும் புடவைகளும் எடுத்துத் தந்தோம். என்னேயும், அலமேலுவையும் தவிர் வேறு யார் இதில் தலையிட் டிருந்தாலும் பாவேந்தர் அனுமதித்திருக்கமாட்டார். இதைப் பற்றி நான் அண்ணுவிடம் சொன்னபோது **நல்ல வேள்ை செய்தீர்கள்! பாரதிதாசனுக்கு எல்லா அறிவும் உண்டு; பிழைக்கும் அறிவு மட்டும் கிடையாது. நிச்சயமாக அந்த ஏழாயிரமும் மிஞ்சும்’ என்ருர். 'இன்ப இரவு நாடக அரங்கேற்றம் தொடர்பாகப் பாரதிதாசன் சேலத்துக்கும் வேறு சில ஊர்களுக்கும் சென்ருர், நாங்கள் குடியிருந்த வீட்டின் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருந்ததாலும், வேறு பல சிக்கல் களாலும் அவ் வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் எங்களுக்கு எற்பட்டது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை மூன்ரும் சந்தின் கோடி வீட்டில் குடியேறிளுேம். அது இசுலாமியர் வாழும் பகுதி. அந்த வீடு பெரியது; வளமனை (Bungalow). அதன் உரிமையாளர் ஒரு முஸ்லீம். அவருக்கு இசுலாமிய மனைவியர் சிலரும், இரண்டு இந்து மனைவியரும் இருந்தனர். அவருடைய இந்து மனைவியருக்குப் பாதுகாப்பாகவும், துணையாகவும் நாங்கள் இருப்போம் என்ற கருத்தில் வாடகையில்லா மலே குடியிருக்க எங்களை அனுமதித்தார். ஆனல் வாடகையில்லாமல் குடியிருக்க நாங்கள் மறுத்து விட் டோம். பாரதிதாசன்திங்கன் தோறும் வாடகை ரூ.4.0) = கொடுக்கத் தாமே முன் வந்தார். அவரும் எங்களுடன்