பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக்கல்லறையில்|42 வாங்கிப் பெரியார், அண்ணு முதல் தமிழ் நாட்டில் உள்ள இயக்கத்தலைவர்களுக்கும். அறிஞர்களுக்கும் அனுப்பி வைத்தார்’ என்று நான் சொன்னேன்.

  • மிகச் சிறந்த நூல்; தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ள நூல்!” என்று பாராட்டினர் பாரதிதாசன். இந்த நூல் கருத்தை மையமாக வைத்துத்தான் தமது தமிழியக்கத்தைப் பாட்டு வடிவில் பாரதிதாசன் எழுதி ஞர். நான் எவ்வெத்துறைகளில் தமிழ் செழிக்க வேண் டும் என்று குறிப்பிட்டிருந்தேனே, அவற்குேடு திரைப் படம் போன்ற வேறு துறைகளையும் அவர் சேர்த்துக் கொண்டார். -

"வருங்காலத் தமிழகம்’ என்ற எனது வேருெரு நூலுக் குப் பாரதிதாசன் முன்னுரை எழுதியுள்ளார். அம் முன்னுரையில், “திரு.க. அப்பாத்துரை 'தமிழ் வாழ்க்' என்று உரை நடையில் எழுதியதை நான் தமிழியக்கமாக்ப் பாட்டில் எழுதியிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். "வருங்காலத் தமிழகம்’ என்ற நூலைப் பற்றிக் குறிப்பிடும் போது, அந் நூல் தொடர் ப்ான வேறு சில செய்திகளையும் நான் கூறியாக வேண் டும். இந்த நூலேயும், மு. வரதராசனுர் எழுதிய கி.பி. இரண்ட்ாயிரத்தையும் நூலாக வெளியிட்டவர் இயக்கத் தோழர் திருவாளர் சம்பந்தம் என்பவர். அவரைப்பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். "வருங்காலத் தமிழகம்’ நன்கு விற்பனையாயிற்று. ஆளுல் இன்று வரை எனக்குப் பணம் வரவில்லை. இந்நூலை புரூஃப் பார்த்துத் திருத்தியவர் பாரதிதாசன். சந்திப்பிழைகளே இருக்கக் கூடாது என்பதில் பாரதி தாசன் மிகவும் கண்டிப்பானவர். சில செய்யுள் வரி களில் முற்றுப் புள்ளிகள் வரும் இடத்தில் கூடச் சந்தி போட்டுத்தான் முற்றுப் புள்ளி வைப்பார். இலக்கணத் தைத் தவருமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் அவர் காட்டிய அக்கறை விளங்கும். பாரதிதாசனின் தமிழயக்கமும் வேறு சில காப்பியங் களும் வெளியான பிறகு, மறைமலையடிகளைச் சந்திக் கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. 'பாரதிதாசனின்