பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 144 சரியில்லை. ஆல்ை பெரியார் சொன்ன குறிக்கோனின் அடிப்படையிலேயே தொடக்க காலச் சைவசித்தாந்தமே. அடங்கியிருக்கிறது.நடுவில் ஆரியம் கலந்ததால் அதன் தோற்றங்களெல்லாம் மாறியிருக்கின்றன. சைவ சித் தாந்தத்தைப் பகுத்தறிவுக் கண்ணுேட்டத்தோடு படித் தால், திருவள்ளுவருடைய கருத்துக்குப் போகலாம்' என்று அவர் குறிப்பிட்டார். பாரதிதாசன் கூறிய இந்த விளக்கம் எனக்குப் பிற்காலத்தில் பெரிதும் கை கொடுத்து உதவியது. இந்த அடிப்படையில்தான் நான் திருக்குறளுக்கு உரை எழுதத் தொடங்கினேன். பாரதிதாசன் இப்போது உயிரோடிருந்தால், அந்த உரையை விரும்பி வரவேற்றிருப்பார். காந்தியடிகள் ஒருமுறை இலண்டன் ஒலிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது "நல்ல குறிக்கோளை நாடிச் செல்லும் உள்ளப் பண்புதான், நாகரிகத்தின் வளர்ச்சியாக அமைந்தது' என்று குறிப்பிட்டார். கடவுளுக்கு அவர் கொடுத்த இலக்கண விளக்கமும், திருக்குறளின் கடவுள் வாழ்த்துக் கொள்கையும் ஒனறு தான் என்பது என் கருத்து. கோவை முத்தமிழ் மாநாடு 1950-ஆம் ஆண்டு மேத் திங்கள் 27, 28 ஆகிய நாட் களில் முத்தமிழ் மாநாடு ஒன்று கோவையில் நடை பெற்றது. தாய்க்கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க தனிக்கட்சியாக இயங்கத் தொடங்கியநேரம். தி.மு.க. தன் சொந்த வளர்ச்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் தீவிர மான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தது. நாவலர் ச சோமசுந்தரபாரதியார் மாநாட்டுத் தலைமை ஏற்றி ருந்தார். இம் மாநாட்டில் என் பங்கு அதிகம். - இம் மாநாட்டில் திராவிடம்’ என்ற சொல் கடும் சொற்போருக்குக் காரணமாகியது. நாவலர் பாரதியார் 'திராவிடம்’ என்ற சொல்லைக் கடுமையாகச் சாடிஞர். 'திராவிடர்” என்ற சொல்லுக்கு 'ஓடிவந்தவர் என்று பொருள். அமிழ்த்மனைய 'தமிழ்’ என்னும் சொல்லிருக்கத் திராவிடம் என்ற சொல்லை ஏன் கையாள வேண்டும் என்பது அவர் வாதம். 'திராவிட முன்னேற்றக் கழகம்’ S SAASSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS * A tendency towards good end is the evolution of civilization- Mahatma Gandhi.