பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


45|முருகுசுந்தரம் என்பது 'தமிழர் முன்னேற்றக் கழகம்’ என்றிருந்தால் சிறப்பு என்று அவர் வற்புறுத்தினர். பாரதிதாசனும் நாவலர் கொள்கையை ஆதரித்துப் பேசினர். அதற்கு அண்ணு "நான் தமிழ் உணர்வு அற்றவன் அல்லேன். என் வீட்டில் உள்ள பெரியார் படத்தின் கீழ் "தமிழர் தலைவர் பெரியார்’ என்று தான் எழுதிவைத் துள்ளேன். திராவிட முன்னேற்றக் கழகம் என்று நான் கட்சிக்கு பெயர் வைத்துள்ளது கொள்கையின் அடிப் படையில்!” என்று பேசினர். நான் அண்ணுவை ஆத ரித்துப் பேசினேன். அப்போது மாற்றுக் கட்சிக்காரர் சிலர் பெரியாரைத் தமிழர் அல்லர் என்று கூறிக் கண்டனம் செய்தனர். திராவிட மொழிகள் பேசப்பட்ட நிலப்பரப்புகள் எல்லாம் அப்போது பிரிக்கப்டாமல் ஒரே மாநிலமாக அமைந்தி ருந்தன. இந்தக் காரணங்களை உள்ளத்தில் கொண்டு, கொள்கை அடிப்படையில் அண்ணு திராவிடத்தை ஏற்ருர். முத்தமிழ் மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக ஒரு குழுமம்(Board) அமைக்கவேண்டும் என்று ப்ாரதிதாசன் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அண்ணுவுக்கு அது விருப்பமில்லை. என்ருலும் அதை அவர் எதிர்க்கவில்லை. தமிழ் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர்களாக நானும், நாவலர் நெடுஞ்செழியனும் தேர்ந்தெடுக்கப்பட்டோம். ஆனால் அக்குழுமம் பின்னர் இயங்கவில்லை. அண்ணுவுக்கும் பாரதிதாசனுக்கும் கருத்து வேறு பாடுகள் முன்பும் இருந்தன; அப்போதும் இருந்தன. தி.மு. கழ்கத்திற்குள் தமிழ்வளர்ச்சிக்கென்று தனிக் குழுமம் அமைப்பது, கட்சிக்குள் கட்சியாகி விடு மோ என்று அண்ணு கருதியிருக்கலாம். அண்ணு நுண்ணிய அரசியல் அறிஞர். அரசியல் நோக்கில் அண்ணுவின் கருத்துச் சரியே. தமிழ் வளர்ச்சியைத் தி.மு.க. தனது உயிர்த்துடிப்பாகக் கொண்டிருக்கும் போது, தமிழ் வளர்ச்சிக்கென்று தனி அமைப்புத் தேவையில்லை என்பது அண்ணுவின் கருத்து. த்மிழ் வளர்ச்சிக் குழுமத்தை இயக்குவதற்கும், அதற்