பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்|48 தொல்காப்பியர் காலத்துக்கு முன் முத்தமிழ் இருந்தது. தொல்காப்பியர் காலத்தில் கூட இயற்றமிழ் தான் ப்ெரி தும் வளர்ச்சியுற்றது. இசைத்தமிழும் நாடகத் தமிழும் நாளாக நாளாகத் தேய்ந்து ஆழிந்தன. இருந்த ஒரு சில நூல்களும் நம்மை எட்டவில்லை. முத்தமிழ்ப் பண்பு மக்களிடையில் இருந்தது.புலவர்கள் மதியாத காரணத் தால் தேய்ந்தது. சிங்ககாலத்தில் படைக்கப்பட்ட முத் தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தைச் சங்கப் புலவர் கள் காப்பியமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்கள் செயற்கையான கட்டுப்பாட்டுக்குள் அடங்காமல், சிலப்பதிகாரம் வெளியில் நின்ற காரணத்தால், சங்கப் புலவர்கள் அதை ஏற்கவில்லை. முத்தமிழ் விரவிய இலக்கியம் மக்கள் இலக்கியமாகக் கருதப்பட்டது; புலவர் இலக்கியமாக மதிக்கப்படவில்லை. பாரதி, இயல் அறிந்த பெருங் கவிஞர்; இசை அவருக் குத் தெரியும்; நாட்டியமும் கட்டாயம் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர் நாட்டியச் சூழ்நிலையில் வளர்ந்தவர். முத்தமிழ் அறிந்த பள்ளு, குறவஞ்சிக் கவிஞர்கள் சிலர் பாரதிக்கு முன் இருந்தாலும், அவர் களால் பழைய சட்டத்தை உடைத்துவெளியில்வரமுடிய வில்லை. சட்டத்தை உடைக்கும் பணியைத் துணிந்து செய்தவர் பாரதியே! சொல்ல விரும்புவதை இயலாக வாயுரைக்கச் சொல்லி, அதையே ராகத்தோடு இசையாகப்பாடி, அதையே செயல் முறையாக நாடகமாக்கியவர் பாரதி.பாரதியின் கண்ணம்மா தெளிந்த இயல்: தித்திக்கும் இசை, திகைக்க வைக்கும் உணர்ச்சி நாடகம். இந்த முத் தமிழும் பிணைந்த பண்பு துவக்க காலத்தில் பாரதி தாசனிடம் இருந்தது. முதல் தொகுதியில் உள்ள "புரட்சிக் கவியில் பாரதியின் பாரதிதாசனைக் காண லாம். பாரதிதாசன் வளர வளர, அவர் இயற்பண்பைவளர்த்த அளவு கவிதையில் இசைப் பண்பையும் நாடகப்பண்பை யும் வளர்க்கவில்லை. இயலையும், இசையையும் தனித் தனியே பிரித்து அவற்றுக்குத் தனித் தனிஇலக்கியங்கள் படைக்கத் தொடங்கிவிட்டார். இசையமுதும், இரணிய தும் அவற்றுக்குச் சான்றுகள்.