பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கட்டியம், ○ சில கவிஞர்கள் வரலாற்றின் குழந்தைகள்: சில கவிஞர்கள் வரலாற்றின் தந்தைகள். பாவேந்தர் இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். சில கவிஞர்கள் அரசவையின் அலங்ககாரப் பொருட்கள்: அத்தாணி மண்டபத்தின் கீறல் விழுந்த இசைத் தட்டுக்கள். சில கவிஞர்கள் அதிகாரத்தின் காலோசை கேட்டதும் தம்மையும் அறியாமல் எழுந்து நிற்கும் சூத்திரப் பாவைகள். பாவேந்தரின் பெயரைக் கேட்டதும் இன்றுஅரசாங்கங்கள எழுந்து நிற்கின்றன.