பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 150 நாட்டுக் கவிஞர்களான ஷெல்லி, கீட்ஸ் ஆகியோரின் பாதிப்பு மற்ருென்று. பார்திக்குச் சங்க இலக்கியப் பாதிப்பு கிடையாது. பாரதிதாசனுக்குத் துவக்ககாலத்தில் பாரதியின் பாதிப்பும் பிற்கிாலத்தில் சங்க இல்க்கியப் பாதிப்பும் இருந்தன. என்ருலும்அவர் பட்ைப்புக்களில் பெரும் பகுதிஅவருக்கே உரித்தான தனித் தன்மை மிக்கவை. பாரதிக்கு வடமொழி, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய 盪 மொழிகளில் தேர்ச்சி உண்டு. பாரதிதாசன் தனித் தமிழ் கவிஞர். பிரெஞ்சு ஆட்சியில் இருந்த புதுச் சேரியில் பிறந்து வாழ்ந்தாலும் அவருக்குப் பிரெஞ்சு இலக்கியப் பாதிப்பும் கிடையாது. தான் சரியென்று நினைத்ததை எவருக்கும் அஞ்ச்ர்மல் பின் விளைவுகளுக்குச் சிறிதும் கவலைப்பட்ாமில் எவ்ன் எழுதுகிருனே அவன் தான் உண்மைக் கவிஞன். பாரதிதாசனிடம் இப் பண்பு முனைப்பாகவே இருந்தது. வரலாறு சில கவிஞர்களைப் படைத்ததுண்டு; இவர் வரலாற்றைப் படைத்த கவிஞர். ஆங்கில இலக்கிய உலகில் தமக்கென்று ஒரு கால கட்டத்தை (Age) உருவாக்கியவர் ஷ்ேக்ஸ்பியர். தமிழில் தமக்கென்று தனிக் காலகட்டத்தை உரு வாக்கிய பெருமை ங்ாரதிதாசனுக்கும் உண்டு. இவருக் கென்று.தனிப்வம் இலக்கிய வரலாறு, தமிழ் உள்ள ளவும் இருக்கும். பாரதியை உலகமெங்கும் விளம்பரப் படுத்தவும், அவர் இலக்கியங்களைப் பரப்பவும் ஆற்றல் வாய்ந்த ஒரு பின்னணி இருக்கிறது. பாவேந்தருக்கு அது இல்லை. அப்படி இருந்திருந்தால், இவர் வாழ்ந்த காலத் திலேயே நோபில் பரிசு பெற்றிருப்பார். -