பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்:54 சம்மட்டி அடியாக விழுந்தது. மாணவர்களுக்குப் பள்ளி யில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடல்களின் மேல் அவர் கவனம் திரும்பியது. பிள்ளையார் வாழ்த்தாக ஒளவையார் பாடிய பாடல் ஒன்று அவரிடம் மாட்டிக் கொண்டது. அப்பாடல்: - பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை - தாலும் கலந்துனக்குநான்தருவேன்-கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றும் தா. a "என்ன ஏமாற்று இது. அவனவன் பத்து வருஷம் பெரும் புலவர்கிட்ட பாடங் கேட்டாலும் இயற்ற மிழையே கரைகாண முடியல. ஓர் அணுவுக்கு பாலும் தேனும் கொழுக்கட்டையும் வாங்கிப் புள்ளை யாருக்குப் கட்ைச்சிட்டா முத்தமிழும் வந்திடுமா? முத்தமிழ் என்ன அவ்வளவு 'சீப்பர்ப் போச்சா? இதை ஒரு பாட்டுன்னு இவ பாடிட்டா...முண்டம்! இதை மிாணவருக்குப் பாடமா வேற வெச்சிட்டானுக... இந்த நாடு உருப் படுமா?’’ என்று விளாசித் தள்ளிவிட்டார். அங்கு அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தில் சலசலப்பு. பாவேந் தர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கூட்டம் முடிந்தது. தலைமையாசிரியர் முகத்தில் ஈயாடவில்லை. ஒரு வாரத்தில் தலைமையாசிரியர் சத்தியதாஸ் காட்டு மன்னர் குடியிலிருந்து திருக்கோவிலுர் மாற்றப்பட் பட்டார். இச்செய்தியை அறிந்து நான் மிக வருந்தி னேன். அடுத்த முறை நான் பாவேந்தரைச் சந்தித்த போது,’ என்ன...இப்படிப் பண்ணிட்டீங்க... உங்க பேச்சோட எதிரொலி... பாவம்... சத்தியதாஸ்.புள்ளை குட்டிக்கார...அவனைத் திருக்கோவிலூர் மாத்திட் டாங்க!' என்று வருத்தத்தோடு சொன்னேன். அதற்குப் பாவேந்தர் சிரித்துக் கொண்டே இப்ப என்ன அதுக்கு? சத்தியதாலைத் திருக்கோவிலூர் பள்ளியிலே ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணச் சொல் லுங்க... நான் அங்கே போய்ப் பேசற...தான திருக் கோவிலுரிலிருந்து காட்டுமன்னர்குடி மாத்திட்டுப் போரு...' என்ருர் அவர். எப்படி பதில்?-அவர்தான் பாவேந்தர். Ο