பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முேருகுசுந்தும் வாழ்க்கை. ஏறக்குறைய 1925-ஆம் ஆண்டிலிருந்து அவர் எதிர்கட்சியாகவே இருந்தார். அவள் ஒரு கட்சி ஆயில் உறுப்பினராக இருந்தார் என்று சொல்லுவதை விட அவரே ஒரு கட்சியாக-பாரதிதாசன் என்ற தனி மனிதனே ஒரு ஸ்தாபனமாக விளங்கிளுள், "பர்த்திலெமி என்ற பிரெஞ்சுக்காரர் ஒருவர் புதுச் சேரியிலிருந்து பிரெஞ்சுப் பாராளுமன்றத்துக்கு நின் ருள். அவருக்காகம் பாரதிதாசன் தேர்தல் பணியாற்றி ஞர். தேர்தலில் ஒட்டு எண்ணுவதில் வீண் கலகங்கள் நடத்தி ஓட்டை எதிர்க்கட்சிக்காரர்கள் ஏமாற்றிவிடும் பழக்கம் உண்டு. கூனிச்சம்பட்டு என்ற ஊர் புதுச்சேரி யில் இருந்து பத்துமைல் தொலைவில் உள்ளது. பாரதி தாசன் அங்கு பள்ளி ஆசிரியராய்ப் பணிபுரிந்தார். பர்த்திலெமி தேர்தலின் போது, கூனிச்சம்பட்டு ஒட்டுச் சாவடியில் பாவேந்தர் பணிபுரிந்தார். தேர்தல் அன்று மாலை ஒட்டுப் பதிவு முடிந்தவுடன் சீல் வைத்த ஒட்டுப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு புதுச் சேரி வந்தடைந்தார். புதுச்சேரி மாநிலத் தேர்தல் அதிகாரியிடம் ஒட்டுப் பெட்டிகளே நேரில் ஒப்படைத் தார். ஒட்டுச் சாவடியிலிருந்து ஒட்டுப் பெட்டியை எடுத்து வந்த குற்றத்திற்காகக் கைதுசெய்யப்பட்டார். தண்டனையும் அடைந்தார். அதே நேரத்தில் வேறு குற்றங்களைச்சாட்டி ஆத்மசக்தி’ பத்திரிகை ஆசிரியர் திரு. சாரங்கபாணிச் செட்டியார், தேச சேவகன்” ஆசிரியர் சைகோன் சின்னயா முதலியார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். எல்லாரும் சில மாதங்கள் சிறையில் இருந்து விடுதலை பெற்றனர். புதுச் சேரித் தேர்தல் காலங்களில் பாரதிதாசன் ஒரு சிங்கம். அவருடைய பேணுவின் கர்ஜனையைக் கேட்ட வுடன் அரசியல் நரிகள் ஊளையிட்டு ஓட்டமெடுக்கும். தேர்தல் முடிந்தவுடன் மக்கள் பல நாட்களுக்குக் கவிஞரின் தேர்தல் இலக்கியத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். மாசி மாதத்தில் வரும் மகவிழா புதுச்சேரியில் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படும். வெளியூர்களில் இருந்து சுமார் நூறு சாமிகள் கடலில் மகமுழுக்காடு