பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39.முருகுசுந்தரன் தலைவர் திரு. செல்லான் நாயக்கர் ஆவார். அவர் மக்கள் செல்வாக்குப் பெற்ற வழக்கறிஞர். வாக்காளர் ஆட்டியலில் இருந்த இந்த அநீதிக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்து எழுத்துப்போர் புரிந்தவர் பாவேந்தர், பாவேந்தரின் இம்முயற்சி வெற்றிபெற்ற நேரம், அவர் பணிசெய்த பள்ளியில் ஆண்டுவிழா எடுக்கப்பட்டது. அவ்விழாவில் மாணவர்கள் ஒரு நாடகம் ஏற்பாடு செங் திருந்தனர். கதை, வசனம். பாட்டு எல்லாமே பாவேந் தர்த்ாம். வெள்ளையருக்கும் இந்தியருக்கும் வெவ்வேறு வாக்காளர் பட்டியல் இருந்ததை எதிர்த்துக் கிடைத்த வெற்றியைத் தம் நாடகப்பாட்டில் புகுத்தினர். பல்லவி கூவாயோ கருங்குயிலே யாரும் ஒன்றென்று (கூவாயோ? அநுபல்லவி இரண்ட்ரீம் தொகுதியென்ருர் அக்குறை நீங்கிற்றென்றே இனிதாய் நன்றே (கூவாயோ? தொகையரு ஒரு குடைக் கீழ் நின்ற வருள் சிலருக்கு வெயில்... சிலருக்கு வெயிலோ? குவிந்த பொருளே விடியுமோ சமமாக.. அடையாத தெவ் வகையிலோ? (கூவாயோ) பாட்டு இன்னும் நீளம் இந் நாடகத்திற்கு அழைக்கப்பட்டிருந்த கவர்னர், கல்வி இலாக அதிகாரி, ம்ற்ற பிரெஞ்சுக்காரர் ஆகி யோருக்கு இப்பாட்டு மொழி பெயர்த்துச் சொல்லப் பட்டது. இந்த நாடகத்தில் கல்வியின் சிறப்புப் பற்றி அருமையான பாடல் ஒன்றும் எழுதியிருந்தார். உலகமே உயர்வடைவாய் உள்ளவர்க் கெல்லாம் நீயே தாய்!