பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ே'முருகுசுந்தரம் என் நினைவில் பசுமையாக இருப்பது, 1928 செப்டம்பர் 11இல் ஆனந்தரங்கம் பிள்ளை இல்லத்தில் அவர் பாடக் கேட்டதுதான். அது போல் மற்றைய நாள் பாடல் களைச் சொல்ல முடியாது. 1930-31-இல் பாவேந்தருக்குச் சம்பளம் சுமார் அறுபது ரூபாய்தான். கடன், மற்றுமுள்ள பிடித்தங்கள் போக ஒருமுறை ரூ341 = தான் கைக்கு வந்தது. அவருக்குச் சம்பளம் வரும் நாள் என்று சிலருக்கு வாசனை அடிக்கும். கலகலப்பாக அவர் முன்வந்து நிற்பார்கள். திருவாளர்கள் பச்சையப்ப உடையார், கந்தசாமி ஆச்சாரி, எம். என். சாமி முதலியோர் பெரும் பாலும் வாடிக்கைக்காரர்கள்போல. இவருக்குக்கிடைக் கிறதோ ரூ. 34!=இதில் வாடிக்கையாக உதவிகள் செய்து அவர் இயல்பு. பச்சையப்ப உடையார் என்பவர், தாளத்தில் வல்லவர். 108 தாளங்களிலும் தமக்குப் பயிற்சி உண்டு என்று, செல்லுவார். பிரவுேத்தரும் அவரது தாளஞானத்தில் அதிக மதிப்பு வைத்திருந்தார். எம்.என்.சாமி என்பவர் சிறந்த நடிகர், நடிப்புக் கலை அவரிடம் கைகட்டி நிற்கும். பத்துப் பதினைந்து பேரே' கூடியுள்ள சபையில் கவிஞர் அவரை நடிக்கச் சொல்லு வார். அவர் சோகமாக நடித்தால் எல்லாரும் கண்ணிர் விடுவர். சிருங்காசம் நடித்தால் கலகலவென்று நகைப் பர். கந்தசாமி ஆச்சாசி பாவேந்தருடன் சில்ம்பு விளை. யாடுபவர்; சங்கரன் குளம், கொட்டடி என்ற சிலம்புப் பயிற்சிக் கூடத்தின் முக்கியஸ்தர்; வயது தளர்ந்த, காலத்திலும், உடல் கட்டுடன் விளங்கினர். வ்ைத்தியம் கூடக் கொஞ்சம் தெரியும். இவர்களைப் போன்றவர் இன்னும் பலபேர். மாதா மாதம் உதவிகள் ம்ெளன மாகவே நடக்கும். 歴 1935-ஆம் ஆண்டு. பாவேந்தர் அப்போது அதிகமாக சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு அதிகமாக சுருட்டைப் புகைத்தால் உடல் நலம் அதிகம் பாதிக்குமே; அவரிடம் சொல்லக் கூடாத்ா?’ என்று குயில் சிவா அவர்களைக் கேட்டேன்.