பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில் 82 "நீதான் சொல்லேன்' என்ருர் சிவா. "இப்படிச் சுருட்டுப் பிடிக்கின்றீர்கள்; உடலுக்கும் கெடு தல், பார்ப்பதற்கும் நன்ருயில்லை’ என்றேன் பாவேந் தரைப் பார்த்து. என்ன செய்யச் சொல்றே?’ என்று: கேட்டார் பாவேந்தர். "எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்ல வேண்டும் என்று நினைத்த நான் "எப்படியேர விட்டு விட வேண்டும்' என்றேன். “சரி” என்று பாதி சுருட்டைக் கீழே எறிந்து விட்டார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. சிவா அவர்களும் எதிர் பார்க்கவில்லை. நான்கு நாட்கள் சென்றன. வழக்கம் போல எல்லா வேலைகள்ையும் செய்தார்.

  • சுப்பிரமணியச! சுருட்டு வேண்டாமின்னியே, இப்ப என்ன செய்யறது?’ என்ருர். எனக்கு என்ன சொல் வதென்றே தெரியவில்லை; ஊமையாய் விழித்தேன். பக்க்த்திலிருந்த சிவா பீடி பிடிக்கிறது என்று அவ ருக்கே உரிய முறையில் கூறிச் சிரித்தார். சொல்றியே கொண்டாயேன்” என்ருர் பாவேந்தர். நான் ஓடிப் போய் பீடிக்கட்டு ஒன்று வாங்கி வந்தேன். அதனைப் பற்ற வைத்தார். சில நாட்களில் பீடி எண்ணிக்கை பெருகிவிட்டது. இந்த பீடி இவ்வளவு பிடித்தால்" என்று நான் தொடங்கினேன்.

என்னதாம் செய்யறது?-பாவேந்தர் கேட்டார். சபீடி வேண்டாம் என்றேன். உடனே வாயிலிருந்த பீடியைக் கீழே போட்டார். மூன்று நாட்கள் சென்றன. அன்பர்கள் பலர் வந்திருந் தனர். அவர்களிடம் சுருட்டுப் பிடித்தேன்; வேண்டாம் என்ருன். விட்டு விட்டேன். பீடி பிடித்தேன். அதையும் வேண்டாம் என்ருன்; அதையும் விட்டு விட்டேன். இப்ப என்னுப்பா பண்றது?’ என்ருர் பாவேந்தர். அவர்கள் முன்னும் தெரியாமல் பின்னும் தெரியாமல் விழித்தனர். சிவா நாயக்கர் உடனே பொடி போடேன், என்று கூறி அவருக்கே உரிய சிரிப்பை ஒலித்தார். என்னைப் பார்த்து "ஏம்பா அவர் தான் சொல்லிட் டாரே! அப்ரம் என்ன?’ என்ருர்,