பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்/88 ஈரோட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. பாட்டெழுத வேண்டியபடம் 'பாலாமணி அல்லது பக் காத் திருடன்! பெரியாருடைய வீட்டில் தான் பத்துப் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தோம். பலதினங்கள் காலை எழுந்தவுடன் பெரியாரைப் பார்க் கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அவர் ஊரில் இல் ல்ாத நாட்களில் தான் பார்க்கமுடியாது. பெரிய வாச லில் ஓர் ஒரத்தில் உட்கார்ந்து, அவரது பற்களைக் கழற்றிச் சுத்தம் செய்து கொண்டிருப்பார்; மிகவும் சுறு சுறுப்பாக இருப்பிார்.

  • வாங்க வாங்க! வாங்க ஐயா! நல்லா தூக்கம் வந்து தா? ஒன்னும் அசெளகரியமில்லையே! படம் புடிக்கருங் களா?’ என்று பரிவோடு பாவேந்தரை விசாரிப்பரர் பெரியார். பிறகு தமது தங்கையை அழைத்து ஐயா பாரதிதாசன் வந்திருக்காங்க’ என்பார். பாவேந்தரும் யாரிடத்திலும் காட்டாத அடக்கத்தோடும் மரியாதை யோடும் நடந்து கொள்வார். மற்றவர் யாரான லும் பாவேந்தர்தான் முன்னே பேசுவார். பெரியார் ஒருவ ரிடம் மட்டுந்தான்-அவர் பேசட்டும் என்று பெளவியத் தோடு காத்திருப்பார். பெரிய குடும்பத்தில் தந்தையா ரிடம் சிறு பிள்ளைகள் பேசும்போது, அன்பும் பாசமும் பக்தியும் கொந்தளிக்குமே அம்மாதிரி இருக்கும்.

இலை போடுவார்கள். பெரியார் உக்காருங்கோ!. உக்காருங்கோ!' என்பார். ஒன்றும் பேசாமல் சாப்பிடு வோம். காலை ஆறு மணிக்கே எங்கள் காலைச் சிற்றுண்டி ஏற்பாடு செயயப்படும். பாவேந்தர் இரவில் எவ்வளவு நேரம் விழித்திருந்தாலும், எழுவது மட்டும் அதிகாலை யில் எழுந்து விடுவார். காலையில்தான் மிகத் தெளிவாக இருப்பார். எதையும் மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயங்களில் படுக்கையிலே உட்கார்ந்து கொண்டு தலையணை ஒன்றை முன்பக்கம் வைத்துக் கொள்வார். எதையோ நோக்கிக் கொண் டிருப்பார். பேசுவதில் கூடத் தனி மகிழ்ச்சி தென்படும். பாட்டெழுதுவதும் கூடக் காலையில்தான். இவ்விடத்தில் பாவேந்தரைப் பற்றி ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.