பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குழந்தை ஒரு மாாபை வாயால் சுவைத்து, ஒரு மார்பை விரலால் நெருடும்போது தாய்க்கு ஏற்படும் இன்பலயம், பாவேந்தர் பற்றிய நினைவுகள் என் உள்ளத்தை நெருடும் போதெல்லாம் எனக்கும் ஏற்படுவதுண்டு. நீண்டநாள் காத்திருந்து மணந்த காதலிபோல்பேராசிரியரின் கட்டுரை என்னைத் தேடிவந்தடைந்தது. சர்வோதயத் தலைவர் எஸ்.ஆர்.எஸ். அவர்களின் கட்டுரை ’பாவேந்தரின் எழுத்து வடிவம்’ என்று சொல்லலாம். பன்மொழிப் புலவரின் எண்ண அலைகளைச் சென்னை சென்று . நாடாவில் பதிவுசெய்து வந்தேன். இம்மூன்று 歌 பேரறிஞர்களின் கட்டுரைகள் இதற்குமுன் நமதுபார்வைக்குத் தட்டுப்படாத பாரதிதாசனை அகலத்திரையில்