பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69lமுருருசுந்தரம் புதுச்சேரி அரசியலில் அவரது திறமையான எதிர்ப்பைச் சமாளிக்க முடியாத பொருமைக்காரர்களும், அவரது தமிழ்வாள் வீச்சின்முன் நிற்க முடியாதவர்களும் அவரைக் கொள்கை ரீதியில் எதிர்க்க முடியாமல் அவர் குடிக்கின்ருர் என்ற குற்றச்சாட்டைத் தொடங்குவார் கள். அவ்வாறு பாவேந்தரைக் குறை கூறுபவர்களுள் பலர் பீப்பாய்க் குடியர்கள். அவர் காலத்துப் புதுச்சேரி அரசியல் தலைவர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் தாம். புதுச்சேரி மண்ணில் குடியின்வேர் ஆழமாக ஊன்றிக் கிடக்கின்றது மன்ருேரம் சொன்னுர் மனையில் வேதாளம் சேரும்; வெள்ளெருக்குப் பூக்கும் என்பார்கள். குடிவேர் விட்ட வீடும் குட்டிச்சுவராகிக் கிடக்கும் என்பதற்குப் பல சான்றுகள் புதுச்சேரி நகரத்தைச்சுற்றிக்கிடைக்கும். பாவேந்தரின் அரசியல் பகைவர்கள் அவர் குடிக்கிருர்: குடித்தால் தான் பாட்டெழுதுவார்; அவர் குடிப்பதற்கு அளவேயில்லை!" என்றெல்லாம் பேசுவது வழக்கிம். நான் பாவேந்தரை அருகிருந்து நீண்ட நாள் பார்த்த வன். அவர் சில சமயங்களில் குடிப்பதுண்டு. தினமும் குடித்தாக வேண்டும் என்ற நிலை அவருக்குக் கிடை யாது. குடித்து விட்டுப் பாட்டெழுதும் பழக்கம் அவரிடத்தில் இல்லை. "சீச்சீ! குடித்துவிட்டுப் பாட்டெழுதுவதா?’’ என்று ஒருமுறையன்று, பல முறை பாவேந்தர் கூறி யிருக்கிருள். கண்ணதாசன், கம்பதாசன் போன்ற கவிஞர்கள் Mood உண்டாகக் குடிப்பதாகச் சொல்லியிருக்கிருர்கள். பாவேந்தருக்குப் பாட்டெழுத அவ்வித Mood ஒன்றும் வேண்டுவதில்லை. எழுதத் தொடங்கினல் கையில் உள்ள சிகரெட் வாய்க் குப் போகாது. கொளுத்திய சிகரெட் ஒரு தடவை ஊதியது, மறுதடவை ஊதாமல் அப்படியே கையிலேயே சாம்பலானதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் எழுத்து தெளிவான உணர்விலிருந்து வருவது. நமக்கு நட்க்கப் போகும் நிகழ்ச்சி அவருக்கு எப்போதோ உணர்வில் தோன்றிவிடுகிறது.