பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71|முருகுகந்தசம் பாவேந்தரின் கற்பனைகளும், உவமைகளும் மிக அற்புத மானவை. அவற்றைச் சுவைத்து மகிழ்வதை விட்டு விட்டு, அவருடைய சொந்தப் பலஹlனங்களை வெளிச் சம் போட்டுக் காட்டுபவர்கள் அறிவில்லாதவர்கள். ஒரு கவிஞனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அவன் படைப் பையும் ஒப்பிட்டுப் பேசுவது பொருத்தமற்றது. குயிலின் தோற்றத்துக்கும் அதன் குரலுக்கும் என்ன சம்பந்தம்? கவிஞனைக் காணத் தெரியாத கபோதிகள், தங்க ளுடைய கையாலாகாத் தனத்தை, அவர்மீது புழுதிவாரி இறைத்து மெய்ப்பித்துக் கொள்கிருர்கள். J இனி ஈரோட்டில் திரு.டி.கே. சண்முகத்தின் ஒத்திகைச் சாலைக்குச் செல்வோம். கதையில் எந்தெந்த இடங் களில் பாட்டு வேண்டும் என்று ஷண்முகம் சொல்வார்; மெட்டையும் பாடிக் காட்டுவார். ஐந்தே நிமிடங்களில் பாட்டு தயாராகிவிடும். டி கே. எஸ் மகிழ்ச்சியில் திகைத்து நிற்பார். ஒத்திகையின் போது பாட்டின் அழகுதான் எல்லாருடைய வாயிலும் அடி படும். பாரதிதாசன் சினிமாவுக்குப் பாட்டெழுதுவது அதுதான் முதல் தடவை. ஒரு நாள் படம் எடுக்கும் காட்சியைப் பார்க்க என்னை அழைத்துப் போனர். அடிபட்ட ஒருவர் ஆற்றில் உருண்டுவரும் காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தனர். அக்காட்சியில் நடித்தவர் திரு. சகஸ்ரநாமம். அவருக்கும் அதுதான் முதற்படம். அவரது நடிப்பைப் பாவேந்தர் மிகவும் பாராட்டினர். அந்தப் படத்தின் இயக்குநர் திரு. ராவ் என்பவர்; நல்ல திறமை வாய்ந்தவர். ஒத்திகையின் போது அவர் நடித் துக் காட்டியதைக் கவிஞர் பெரிதும் பாராட்டி மகிழ்ந் தார். திரு. ராவ் ஒரு நல்ல குடியர். ஒத்திகையில் ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை உள்ளே போய் ஒரு கோப்பை குடித்துவிட்டு. வருவார். பாரதிதாசனுக்கு அதைப் பொறுக்க முடியவில்லை. என்னப்பா இவன் இப்படிக் குடிக்கிருன்?’ என்று அவர் எதிரிலேயே கூறினர். ஏதோ ஓர் இரண்டாந்தர நடிகை தனக்குப் படத்தில்