பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்,76 வர்கள். கைத்தறி நெசவாளர்கள் பலர் திராவிடர்க், கழகத்தைச் சேர்ந்தவர்கள். ரோடியர் மில் தொழிலாளர் களின் தலைவர் திரு. சுந்தரராசு உறுதிமிக்க திராவிடர்க் கழகத்தவர். அரங்கேசன் என்பவரும் அப்படித்தான். திரு. அரங்கேசன் அடிக்கடி பாவேந்தரைச் சந்தித்து இயக்க நிலைமையை எடுத்துக் கூறுவார். தொழிலாளர் இயக்கத்தை எதிர்த்து வந்தவர்களைப் பாவேந்தர் புல வருடங்களாக எதிர்த்து வந்திருக்கிருர், நாங்கள் இளை ஞர்கள்: அனுபவமில்லாதவர்கள். நாங்கள் எங்கு ஏமாந்து விடுவோம்ோ என்ற கவலை அவருக்குண்டு. ஆந்நாளையத் தொழிலாளர் இயக்கத்தின் குறிக்கோள் தேர்ழிற் சங்கம்.அன்மத்துக் கொள்ள உரிமிைகோருவது தான். தொழிற் சங்கம் அமைக்க முன் வருபவர்களுக்கு இரண் டு ஆண்டுகள் தண்டனை கின்டக்கும் வகையான் சட்ட அமைப்பு அன்றையப் புதுவை அரசியலில் இருந்தது. அந்தச் சட்டத்தை எதிர்த்து, மீறித் தொழி: லாளர் ஒன்றுபட்டு அப்போது போராட்டம் நடத்தினர். 1936ஆம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி உள்ளி ருப்பு வேலைநிறுத்தம் நடத்திக் கொண்டிருந்த தொழி லாளர் மீது,வெளியிலிருந்த போலீசார் யந்திரத்துப்பாக் கியால் சுட்டனர். அத்துப்பாக்கிச் சூட்டில் 15பேர்கள் உயிரிழந்தனர். ஆலையும் தீப்பற்றி எரிந்தது. மக்களும் தொழிலாளர்களும் கொதிப்பான மனநிலையில் இருந்த" னர். டிசம்பர் மாதத்தில் தாவீது என்பவர் சுடப்பட்டார் அரசியல் கண்ளுேட்டத்தில் அந் நிலையில் தோழர் வ.சுப்பையாவும், வழக்கறிஞர் சவ்ரிநாதனும் தொழி லாளர் சார்பில், பாரிஸ் சென்று பிரான்ஸ் நாட்டு அமைச்சரவையை அணுகினர். இவர்கள் பாரிஸ் சென்று திரும்பியதன் பயனுகப் புதுவைக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடைத்தன. பிரான்ஸ் நாட்டு முன்னேற்றமான தொழிற் சட்டங் களும் இங்கு அமுல் படுத்தப்பட்டன. மேற்படி சட்டங் களின் நகல் ஒன்றைத் திரு. சுப்பையா பாரிஸிலிருந்து அனுப்பி வைத்தார். பிரெஞ்சு மொழியில் இருந்த அதனைப் புதுவைத் தொழிலாளர்கள் புரிந்து கொள்ள ஆவல் கொண்டனர். அப்போது இரவு பகலாகக் கண் விழித்துப்பாவேந்தர் அதனைத் தமிழாக்கிக் கொடுத் தார். இப்பணியில் திருவாளர் ராமாநுஜம், வாத்தியார்