பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17:முருருசுந்தரம் கண்ணுசாமி ஆகியோர் உடனிருந்து உதவி புரிந்தனர். சட்டத்தைத் தமிழில் செய்தால் அது வறட்டுப் பாதை யாகஇருக்கும். ஆனல் பாரதிதாசன் தமிழாக்கம் செய்த தால்அது தனிச்சுவையோடு இருந்தது என்பேன். அரும் போடுபட்டுக் கிடைத்த அந்த உரிமையை மக்களுக்கு வழங்குவதில் அவருக்கு அளவிலாத மகிழ்ச்சி. பாரீஸ் பயணம் முடித்துத் திரு. சுப்பையா ஜூல்ை மாதத்தில் புதுவை திரும்பினர். அப்போது ஒர் அற்புத் மான வரவேற்புக் கவிதை எழுதித் தந்தார் பாவேந்தர். அழிவார்கள் என்றிருந்த அந்த நிலைமாற்றித் தொழி லாளர் என்ற நிலைக்குக் கொண்டுவந்தாய்' என்பது அப்பாட்டில் ஒரு வரி. அவரது உள்ளப் பூரிப்பை அந்த வரவேற்பில் காண முடிந்தது. சக்தி வாய்ந்த போராட்டமும், அதனை அடக்க அரசு எடுத்த கடுமையான அடக்குமுறையும், துப்பாக்கிச் சூடும், மக்களின் மகத்தான தியாகமும் சிறிய புதுச் சேரியில் புதிய புரட்சிச் சூழ்நிலையை உருவாக்கின. ஆளுங்கட்சியினர் இராஜிநாமா செய்யவேண்டும் என்று புதுவை மக்கள் கோரிக்கை விட்டனர். ஆயிரம் சைக்கிள் களில் இளைஞர்கள் ஒவ்வொரு சட்டசபை உறுப்பினர் வீட்டுக்கும் போய் இராஜிநாமா கேட்டனர். என்ன நடக்குமோ? துப்பாக்கிச் சூடு நடக்குமோ? என்று மக்கள் அச்சமும் பீதியும் கொண்டவர்களாய் இருந் தாலும், அதே நேரத்தில் இராஜிநாமாவைப் பெற்ருக வேண்டும் என்ற உறுதியும் கொண்டிருந்தனர். ஊர்வலம் நடந்த மறுதினம் மகாஜனக் கட்சியின் நிர் வாகக்குழு திவான் கந்தப்ப முதலியர்ள் வீதியில் உள்ள நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரத்தில் கூடியது. 鷺a蠶 உறுப்பினர்களின் இராஜிநாமாக் கடிதம் தோழர் சுப்பையா கைக்கு வந்தது. பாவேந் ரின் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ఃక్రి! ಸಿ உட்கார முடியவில்லை. எழுந்து நின்ருர். "எத்தனை வருஷமா? எத்தனை வருஷமா? என்னென்ன பாடுபட்டிருப்போம். அதில் எல்லாம் ஒன்றும் வரவில்லை. இதேன் பாத்தியா!' என்று தோழச் சுப்பையாவின் கையில் இருந்த இராஜி