பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


85lமுருகுசுத்தசம் பாவேந்தரும் சிவாஜி கணேசனும் காட்சி தந்தனர்' பாவேந்தரின் ஆசைக்கனவான பாண்டியன் பாசு படம் வெளிவராத கதை.பலருக்கும் தெரியும்ே! விரைவில் நாங்கள் பாவேந்தர் முன்னுல் அழைக்கப் பட்டோம். பத்தாண்டுகளுக்கு முன் கம்பீரமான தோற் றத்தோடு திகழ்ந்த கவிஞர் ஒரளவு சோர்வோடு காட்சி யளித்தார். கட்டிலில் எழுதுகிற அட்டையோடு அமர்ந் திருந்தார். அவருடைய மாணவர் மு. அண்ணுமலையின் மாணவன் நான் என்றதும் அப்ப. நீ என் போன்...” என்று சொல்லிக் கொண்டே என்னை அனைத்து நெற்றி யில் முத்தமிட்டார். என் மேனி சிலிர்த்துப் பரவச முற்றது. கவிழ்ந்து சாய்ந்து எழுதிக் கொண்டிருப்பது தம் வழக் கம் என்று சொல்லிப் புறங்கைகளைத் தூக்கிக் காட் டிர்ை. கருமையாக இரண்டு புறங்கைகளும் தழும்பு பாய்ந்திருந்தன. தமிழ்க் கவிதை முற்றத்தில் காலத் தால் அழிக்க முடியாத சுவடுகளைப்பதித்த பாவேந்தரின் கரங்களில் இருந்த தழும்புகள் யுத்தகள்ம் சென்று வந்த போர் மறவனின் வீரத் தழும்புகளை எனக்கு நினை ஆட்டின. பின்னர் அச்சாகியிருந்த கவிதைப் பகுதிகளை அவர்பால் தந்து அணிந்துரை வேண்டினுேம். இரண்டு நாள் கழித்து வந்தால் படித்து விட்டு அணிந்துரை தருவதா கத் தெரிவித்தார். அந்தக் கவிதைச் சந்நிதானத்திலி ருந்து வணங்கி விடைபெற்ருேம். ಶ್ದಿ நாள் கழித்து-காலைப் பொழுதில் நானும் சாமையாவும் பல் வகைக் கணிகளையும ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டு போனுேம். இதெல்லாம் எதுக்கு...' என்று சொல்லிய பாவேந்தர், * பழனியம்மா’ என்று மனைவியாரை அழைத்து அவற்றை எடுத்துக் கொண்டு போகச் சொன் ஞர். விரைவில் அம்மையார் பழச் சுளைகளையும் கீற்றுக்களையும் தட்டுக் களில் கொண்டு வந்து வைத்தார். நம்ம சாயல்...கவியிலே இருக்கு...இன்னும் நீட்டா (நீளமாக) எழுதணும்' என்ருர் பாவேந்தர். பிறகு ஒரு