பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


87|முருகுசுந்தரம் களையும் பாராட்டிவிட்டு நம்ம மணிமேகலை வெண்பா, கண்ண்கி புரட்சிக் காப்பியம் புத்தகத் இதயாரிப்பு அவ் வளவு நல்லா வரலே...' என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் எனக்கு நன்கு நினைவில் நிற்கின்றது. Ια 1963 செப்டம்பர் 22-ஆம் நாள் பொள்ளாச்சி நகரில் கவிஞர் கே.சி.எஸ். அருணுசலமும் நானும் மற்றும் பல பாரதி அன்பர்களும் ஒன்ருக இணைந்து மிகப் பிரம்மாண்டமான பாரதி விழா நிகழ்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டோம். ஒருநாள் முழுவதுமாகக் காலைமுதல் இரவு வரை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன. எஸ். இராமகிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பன், ரஷ்ய நாட்டுத் தமிழ் மாணவி இசபெல்லா முதலிய பற்பல அறிஞர்களும் கவிஞர்களும் கலந்து கொண்ட பெருவிழாவுக்குப் பாவேந்தரையும் அன்புடன் அழைத் திருந்தோம். விழாநாளன்று பயணியர் விடுதியில் காலை ஏழரை மன்னிக்கே பாவேந்தர் வந்து சேர்ந்து விட்டார். எங்க க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும்படி பாவேந்த ன் துணைவியார் பழனியம்மாளும் உடன் வந்திருந் தார். வந்த உடனேயே முகச்சவரம் செய்ய ஆள் வேண்டுமென்று கேட்டார். ப்க்கத்திலிருந்த முடி வெட் டும் நிலையத்துக்குப் போகலாம் என்று யோசன்ை தெரி விக்கப்பட்டது. அதெல்லாம் ஒத்து வராது..இங்கேயே ஒருத்தரைக் கூட்டிவா’ என்று கர்ஜித்தார். அவ்வாறே உடன் கட்டளையை நிறைவேற்றினுேம். மயிலஞ்சந்தை என்ற இடத்தில் பெரிய பந்தல் அமைத் கப்பட்டிருந்த்து. கால்யில் என் தலைமையில் கவியரங் ఫి பாவேந்தர் முன்னிலையில் நிகழ்ந்தது. அந்நிகழ்ச்சி εί) "அலையாடும் தென்புதுவை அழகாடும் பட்டினத்தின் கலைபாடும் குயிலான கவியரசர் பாவேந்தர்