பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89|முருகுசுந்தரம் புதுரம்பம் கண்டுபிடிச்சிருக்கான்-கீர்த்தரைம்பம்’ என்றுகிண்டல் பண்ணினர். பாவேந்தரை மேடையில் பேச வைக்க முடிந்ததே என்ற பெரிய நிம்மதி ஏற்பட் • لقين ـمة So அன்றிரவு பாவேந்தரும் பழனியம்மாளும் பயணியர் விடுதியில் தங்கினர். அதிகாலையிலேயே நண்பர் பழனியப்பன் இல்லத்திலிருந்து சூடான இட்டலியும், காரமான குழம்பும் கொண்டுவரப்பட்டது. பாவேந்தர் இச்சிற்றுண்டியை வெகு ரசனையோடு உண்டார். மதிய உணவுக்கும் பாவேந்தரின் பழைய நண்பர் குமாரசாமிபிள்ளை வீட்டுக்குப் போகும்வரை பல செய்தி களைக் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார். கூட்டத் தின் நிதிக் குறைபாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டி ருந்த போது பாவேந்தர் துண்டை விரிச்சு கூட்டத்தில் தண்டனும்’ என்ருர். தண்டல்' என்ற சொல் எனக்கு அப்போது புதுமையாக ஒலித்தது; அதனல் சிரித்தேன். கவிஞர் கே.சி.எஸ். என்னைக் கடிந்து அப்படிச் சொல் வதுதென் ஆர்க்காட்டில் வழக்கு என்று தெரிவித்தார். பின்னர் பாவேந்தர் மறைந்த ஜீவா அவர்களின் சிறம் புக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். ஜன சக்தி ஜீவா மலருக்குத் தாம் கவிதை கொடுத்திருந்தும் மலர் தமக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று குறைபட்டுக் கொண்டார், அப்போது எங்களுக்கிருந்த வசதிக்குறைவில் கவிஞர் பெருமானைப் புகைப்படம் எடுக்கக்கூட முடியவில்லை. ஆணுல் அவரை அழைத்துச் சென்ற குமாரசாமிபிள்ளை கவிஞரையும் திருமதி பழனியம்மாளையும் அமர வைத்து ஒரு புகைப்படம் எடுத்துள்ளார். நண்பர் குமாரசாமிபிள்ளை பாவேந்தரைத் தம்முடன் அழைத்துச் சென்றபோது நாங்கள் விடை பெற்றுக் கொண்டோம், பிறகு அவர் கவிஞரைக் கருருக்கு அனுப்பி வைத்ததாக எங்களிடம் தெரிவித்தார். பாவேந்தர் மறைவுக்கு முன் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சிகளில் ஒன்று பொள்ளாச்சி நிகழ்ச்சி என்று