பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்;94 மழையின் காரணமாகக் கல்லூரிக்கு மதியம் விடுமுறை என்றும், கவியரங்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் அறிவிப்புச் சுற்றறிக்கையாக வந்தது என்று மாணவர்கள் கூறினர். பாவேந்தரை மகிழ்வுந்தில் பார்த்ததும் அந்த மாணவர்களும் என்னைப்பேர்லவே உணர்ச்சி வசப்பட்டு இப்போது என்ன செய்வது" என்றுவிழியால் கேட்டனர். மிகவும் பரபரப்பு அடைந் திருந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நான் விட்டால் இனி பாவேந்தரைக் கொண்டு விழா நடத்த இயலாது' என்று என்மனம் அறிவுறுத்தியது. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 蠶 மாணவர் களிடம், "இன்றைக்கு விழா நடைபெறும்; பாவேந்தர் பேசுவார்; நீங்கள் எல்லோரும் திரும்பிக் கல்லூரிக்கு வாருங்கள்; வழியில் காணும் மாணவர்களையெல்லாம் அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு மகிழ்வுந்தில் புறபபடடோம. பாவேந்தர் நிலைமையைக் கேட்டார்; வேருெரு நாளில் விழாவை வைத்துக் கொள்ளலாமே என்ருர், "கல்லூரிக்கு மதியம் விடுமுறை விட்டிருந்தாலும் மாணவர்களையெல்லாம் திரும்பவரச் சொல்லியிருக் கிறேன்; வழியில் வந்து மாணவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வந்துவிடுவர்; நாம் விழாவை நடத்தலாம் என்றேன் நான். "அது இயலுமா? என்ருர் பாவேந்தர். உங்கள் மீது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வளவு பற்று உள்ளது. அதல்ை விழா கட்டாயம் சிறப்பாக நடக்கும் -நடத்த இயலும் என்று கருதுகிறேன்’ என்றேன்.நான். புன்னதை பூத்த பாவேந்தர் எனத்தொன்றும் இல்ல; உன் ஆர்வத்தைப் பார்த்து மதிழ்கிறேன்: வாழ்த்து கிறேன்; அதனல் நான் வருகிறேன்' என்ருர். மகிழ்வுந்து எகளும்பேட்டை என்னும் சிற்றுரைத் தாண்டி அய்யன்பேட்டை வழியாகச் சென்று கொண் டிருந்தது. அய்யன் பேட்டை நான் பிறந்த சிற்றுார். கல்லூரியில் இருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. என் தமிழ் உணர்வுக்கும் பற்றுக்கும் தீனி போட்டு என்னை வளர்த்த மண் அது. அங்குள்ள மாணவர்களுக்