பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புதுவைக் கல்லறையில்;96 நான் பேச விரும்பவில்லை" என்று கூறிவிட்டு, முதல்வ சிடம் சார்!. நீங்கள் என்ன சொன்னலும் என் காதில் விழாது; விழா நடக்க வேண்டும். அனுமதி தாருங்கள்’ என்று வலியுறுத்தினேன்; வேண்டினேன்.

  • கூட்டம் இல்லாமல் விழா சிறக்காது’ என்ருர்முதல்வர். "கூட்டம் வந்துவிடும்; வந்து விட்டது, ஏனெனில் நான் வரும் வழியிலேயே மாணவர்களிடம் "விழா நடக்கும். வாருங்கள்’ என்று கூறி, வந்துள்ளேன்’ என்றேன் நளன.

பிறகு முதல்வர் "சரி, ஆறுமுகம் ரொம்பவும் உணர்ச்சி வயப்பட்டு விட்டாற்போல் தோன்றுகிறது. எனக்கொன் றும் தடையில்லை; விழாவை நடத்துங்கள்’ என்று அனு ம்தி கொடுத்துவிட்டார். விழா அரங்கம், மாணவர் கூட்டத்தால் நிரம்பி வழிந் தது. மாலை 6மணியளவில் விழா தொடங்கியது. தலை மையுரையில் பாவேந்தர் "தமிழகத்தின் இரு பெரும் பல்கலைக் கழகங்களில் இரு பெருங் கங் காணிகள்; இவர்கள் இருக்கும்வரை தமிழ்வளராதுவாழாது' என்று அரிமா போல் நின்று, விர முழக்கமிட் டார். தமிழ்ப்பற்றுடன் வாழ வேண்டிய இன்றியமை யாமை குறித்தும், தமிழ் வளர்ச்சித்தான வழிவகைகள் குறித்தும் நெஞ்சமெல்லாம் இனிக்கும் வகையில் பேசி முடித்தார். தலை நிமிர்ந்து செம்மாந்து நாங்கள் உட்கார்ந்திருந் தோம். விழா முடிந்த பிறகு முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றேன். தொடக்கத்தில் அறைக்கு வெளியே வந்து பாவேந்தர் அவர்களை முதல்வர் வர வேற்காதது ஒரு குறையாக எங்களுக்கு இருந்தது. முதல்வர் அறையினுள் சென்ற பாவேந்தர் நேராக முதல்வர் இருக்கையைச் சற்று முன்னுல் இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டார் "என்ன செய்வது! எப்படிச் சொல்வது!’ என்று புரியாத நிலையில் நாங்கள் அஞ்சிக் கொண்டிருந்தோம், சிறிது நேரம் நின்று கொண்டிருந்த முதல்வரும் ஏதோ வேறு வேலை நிமித்தமாக வெளியே செல்வது போல் சென்று