பக்கம்:புது டயரி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரியாத சங்கடம்

179

 வைத்திருந்தார்கள். கவர்னர் அவர்களைக் கண்டு, “இப்போது என்ன ஆராய்ச்சி செய்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். பதிப்பைப் பற்றி விசாரித்தார். அப்போது ஆங்கிலப் பேராசிரியர் மொழிபெயர்ப்பாளராக உடனிருந்து, ஒருவர் சொல்வதை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லி வந்தார். ஐயரவர்கள் ஓர் ஏட்டுச் சுவடியை எடுத்துக் காட்டினார்கள். அதைப் பிரித்தும் காட்டினார்கள். கவர்னர், “இந்தச் சுவடிகள் உங்களுக்கு எங்கே கிடைத்தன?” என்று ஆங்கிலத்தில் கேட்டார். சுவடி என்று சொல்லாமல் பனை ஒலைகள் என்ற தொடரை (cudian leaves)ச் சொன்னார். மொழிபெயர்த்த பேராசிரியருக்கு அந்த ஆங்கிலத் தொடருக்குரிய தமிழ் வார்த்தை தோன்றவில்லை. “இந்தச் சருகுகளை எல்லாம் எங்கே சம்பாதித்தீர்கள்?” என்று மொழிபெயர்த்தார். பனை ஒலையைச் சருகு என்று அவர் சொன்னதும் ஐயரவர்களுக்குச் சிரிப்பு வந்து விட்டது. அடக்கிக் கொண்டார்கள். பாவம் எதற்கு எது சரியான வார்த்தை என்று புரியாத சங்கடத்தால் பேராசிரியர் ஒலைச் சுவடியைச் சருகாக்கி விட்டார்.

நான் பல ஆண்டுகளுக்குமுன் முதல் முதலாகப் பம்பாய்க்குச் சென்றேன். பம்பாய்த் தமிழ்ச் சங்கத்தார் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். பம்பாய் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டாயிற்று. மாலையில்தான் கூட்டம் நடந்தது. ஆகையால் பகல் நேரங்களில் ஒவ்வொரு நாளும் சில அன்பர்கள் எனக்காக லீவு எடுத்துக்கொண்டு என்னுடன் வந்து நகரத்தைச் சுற்றிக் காட்டினர்கள்.

ஒரு நாள் மலபார் ஹில்லுக்குப் போனோம். அங்கே மகாத்மா காந்தி தங்கியிருந்த பிர்லா மாளிகைக்குப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/186&oldid=1153240" இலிருந்து மீள்விக்கப்பட்டது