பக்கம்:புது டயரி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புரியாத சங்கடம்

183

 விட்டார். “உங்கள் ஊரில் இன்னும் அதிகமான பிரதிகள் விற்க ஏற்பாடு செய்யவேண்டும்” என்பது அதன் சாரம். அங்கங்கே உள்ள ஏஜெண்டுகள் தங்கள் யோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்து ஏஜெண்டும் ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

மானேஜர் அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். “இதைப் பாருங்கள் ஸார்! இந்த ஏஜெண்டு போக்கிரித்தனமாக எழுதியிருப்பதைப் பாருங்கள்” என்று கடிதத்தைக் காட்டினார்.

“எல்லாரும் பாவிக்கும் புடைவை விற்கும் கடைகளிலும் பத்திரிகைகளைக் கொடுத்து விற்பனவு செய்யச் செய்கிறோம். இன்னும் மிச்சம்பேர் வாங்கும்படி தெண்டிக்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் இருந்தது.

“பாவிக்கும் புடைவை விற்கிறதாவது! வாங்கும்படி தெண்டிக்கிறதாவது! இவர்கள் என்ன போலீஸ்காரர்களா?” என்று மானேஜர் சற்றே கோபக்குரலோடு சொன்னார்.

நான் வாய்விட்டுச் சிரித்தேன். “எல்லாரும் உபயோகப்படுத்தும் ஆடைகளைவிற்கும் பாபுலர் ஜவுளிக்கடைகளில் பத்திரிகைகளைக் கொடுத்து விற்பனை செய்யச் செய்கிறோம்; இன்னும் அதிகம் பேர் வாங்கும்படி முயற்சி செய்கிறோம் என்ற அர்த்தத்தில் அல்லவா அவர் எழுதியிருக்கிறார்?” என்றேன் நான். புடைவை என்பது எல்லா ஆடைகளையும் குறிக்க வழங்கும் சொல் என்றும், விற்பனை என்பதே யாழ்ப்பாணத்தில் விற்பனவு என்று ஆயிற்றென்றும்,மிச்சம் என்பதற்குப் பொருள் அதிகம் என்றும், தெண்டிக்கிறோம் என்பது முயற்சி செய்கிறோம் என்ற பொருளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/190&oldid=1153247" இலிருந்து மீள்விக்கப்பட்டது