பக்கம்:புது டயரி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தூங்குகிற சுகம்!

நான் யாரையும் தூங்குமூஞ்சி என்று வைகிறதில்லை. தூங்குவது என்னவோ தவறாண காரியம் என்று எண்ணினால்தானே அப்படி வையத் தோன்றும் மனிதன் அநுபவிக்கும் சுகங்களில் நன்றாக அயர்ந்து தூங்கும் சுகத்துக்கு இணையாக ஏதாவது உண்டா? சில வகையான சுகங்களைச் சில பருவத்தில்தான் அநுபவிக்க முடியும். ஆனால் குழந்தை முதல் கிழவன் வரைக்கும் எல்லாரும் துயிலினால் சுகம் அடைகிறார்கள். பசியாற உணவு உண்ணுவதும் தன்னை மறந்து தூங்குவதும் கண்கண்ட சுகத்தைத் தருபவை. தெரியாமலா தாயுமானவர், “யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்” என்று சொன்னார்?

எல்லாருமே இரவில் நன்றாக உறங்கிச் சுகம் பெறுகிறார்கள் என்று சொல்ல முடியாது. தூக்கம் வரவில்லையே என்று ஏங்குகிறவர்களே பல பேர். யாராவது தொழிலாளி வெட்டின கட்டை போலச் சுகமாகப் படுத்து உறங்கும் போது அத்தகையவர்கள் கண்டால் அவர்களுக்கு எத்தனை பொறாமை உண்டாகிறது, தெரியுமா? “இந்த மகானுபாவனைப் போலத் தூங்க நாம் கொடுத்து வைக்கவில்லையே” என்று அங்கலாய்ப்பார்கள்.

மனத்தைக் கட்டுப்படுத்தியவர்களுக்கு எந்தச் சமயத்தில் நினைத்தாலும் தூக்கம் வருமென்று சொல்கிறார்கள். நெப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/192&oldid=1153267" இலிருந்து மீள்விக்கப்பட்டது