பக்கம்:புது டயரி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

புது டயரி

 ஒவ்வொரு நாளும் இஞ்செக்க்ஷன் போட்டுக் கொண்டுதான் உறங்குவார்கள்.

தூக்கம் வராமல் இரவுப் பொழுதைக் கழிப்பது போன்ற சங்கடம் வேறு இல்லை. காதலர்கள் ஒருவரை ஒருவர் பிரிந்தால் இரவெல்லாம் தூங்க மாட்டார்களாம். இராத்திரி ஒரு யுகம் போல இருக்குமாம். இலக்கியங்களில் இந்த உறக்கமில்லாத அநுபவத்தைப்பற்றி நூற்றுக் கணக்கில் பாடல்கள் இருக்கின்றன. கம்பராமாயணத்தில் ராமனும் சீதையும் சந்தித்த பிறகு இரவு முழுவதும் அவர்கள் தூங்கவில்லையாம். கொட்டுக் கொட்டென்று விழித்திருந்து பொழுதைப் போக்கினார்களாம்.

இராமாயணத்தில் இரண்டு பாத்திரங்கள். ஒருவன் பதினான்கு வருஷம் தூங்காமலே இருந்தானம். எப்படித் தான் இருந்தானோ? லக்ஷ்மணனை உறங்காவில்லி என்று சொல்கிறார்கள். ஒரு நாள் சரியானபடி தூக்கம் இல்லா விட்டால் மறுநாள் நமக்குக் கொட்டாவியாக வருகிறது. ஒரு வேலை ஒடுவதில்லை. ஏதோ சொப்பனத்தில் நடப்பது போல இருக்கிறது.

வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய திகம்பர சாமியார் என்ற நாவலில் படித்த ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. ஒருவரிடமிருந்து உண்மையைக் கக்குவதற்காக இரண்டு மூன்று நாள் தூங்க விடாமலே செய்தார்களாம். அவர் தம்மை அறியாமலே தூக்கம் இல்லாத மயக்கத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாராம்.

இராமாயணத்தில் மற்றொரு பாத்திரம் கும்பகர்ணன். அவன் தூங்குவதற்காகவே பிறந்தவன். மற்ற ராட்சசர்களைவிட அவன் நிச்சயமாகக் குறைவாகத்தான் பாவம் செய்திருக்கவேண்டும். அவன் வாழ்நாளில் பெரும் பகுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/197&oldid=1153273" இலிருந்து மீள்விக்கப்பட்டது