பக்கம்:புது டயரி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தலையும் தவலையும்

“நேற்று இந்த வீட்டுக்குத் திருடன் வந்தான். இங்கே உள்ள அத்தையம்மாளின் தலை போயிற்று” என்று கடிதம் வந்தது. சம்பந்தப்பட்டவர்கள் அடித்துப் புடைத்துக் கொண்டு கடிதம் எங்கிருந்து வந்ததோ அந்த ஊருக்கு ஒடினார்கள். அத்தையம்மாள் கொலை செய்யப்பட்டாள் என்ற எண்ணத்தோடு போனார்கள். ஆனால் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது அங்கே துயரச் சூழ்நிலையே இல்லை. அத்தையம்மாளே அவர்களே எதிர்கொண்டழைத்தாள். அவளைக் கண்டவுடன் சென்றவர்கள் எல்லாம் திடுக்கிட்டுப் போனார்கள்.

உண்மை இதுதான். அத்தையம்மாள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு தவலையை வாங்கி வைத்துப் பாதுகாத்தாள். அவள் வாழ்விழந்தபிறகு அந்தத் தவலையோடு தன் பிறந்த வீட்டுக்கு வந்தாள். அங்கும் அதைக் கண்போலப் பாதுகாத்தாள். அந்தத் தவலையைத் திருடன் திருடிக்கொண்டு போய்விட்டான். கடிதம் எழுதின பையன், “தவலை போயிற்று” என்பதற்குப் பதிலாக, தலை போயிற்று என்று எழுதிவிட்டான். அதனால் வந்த விளைவு இது!

பேச்சிலும் எழுத்திலும் இப்படி எழுத்துப் பிழைகள் நேரும்போது எவ்வளவோ சங்கடங்கள் உண்டாகின்றன. இப்போதெல்லாம் அச்சுத் தொழில் மிகவும் விரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/200&oldid=1153372" இலிருந்து மீள்விக்கப்பட்டது