பக்கம்:புது டயரி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

“பேசப் போகிறாயா, சாகப் போகிறாயா” என்று ஒரு பழமொழி உண்டு. ‘மேடையிலேறிப் பேசுவது சங்கடம்; அதைவிடச் சாவது மேல்’ என்ற கருத்தை உடையது அது. ஆனால் சில பேர் சாமானியமாக ஒருவரோடு ஒருவர் பேசும்போதே உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறார்கள். இன்னும் சிலபேர் பேசும்போது, “ஏண்டா இவன் பேசுகிறான்?” என்று நினைக்கும்படி, சந்தர்ப்பத்துக்கு ஒவ்வாதபடி பேசுகிறார்கள். சில சமயங்களில் அசம்பா விதமாகவே பேசிவிடுகிறார்கள். அப்படிப் பேசி வருகிறவர்களைப் பார்த்தால், ‘யாகாவாராயினும் நாகாக்க, காவாக்கால், சோகாப்பார் சொல்லிழுக்குப் பட்டு’ என்று சொன்ன திருவள்ளுவர் வாயில் ஒரு வீசைச் சர்க்கரையை, மன்னிக்க வேண்டும், ஒரு கிலோ சர்க்கரையைப் போட வேண்டுமென்று தோன்றுகிறது.

ஒரு மனிதர் தம்முடைய பெண்ணுக்குக் கல்யாணம் செய்ய ஏற்பாடு செய்தார். பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண்ணைப் பார்ப்பதற்கு ஒரு நாளைக் குறிப்பிட்டு எழுதினார்கள். பெண்ணைப் பெற்றவர் அந்த நாள் செளகரியப் படாதென்றும், அடுத்த வாரம் ஒரு நாளில் வரலாமென்றும் எழுதினர். அப்படியே அவர்கள் பெண்ணைப் பார்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/207&oldid=1153386" இலிருந்து மீள்விக்கப்பட்டது