பக்கம்:புது டயரி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

புது டயரி



அமங்கலமான பொருள் ஒன்றும் இருப்பதை அவர் கவனிக்கவில்லை. அவருக்குச் சமஸ்கிருதச் சொற்களே உபயோகிப்பதில் அவ்வளவு ஆசை .

கேட்ட செல்வர், 'இதென்னடா அபசகுனமாக இருக்கிறது; இவர் வம்சக்ஷயம் என்று சொல்கிருரே' என்று உள்ளுற வருந்தினர். பிறகு உபசாரம் செய்து குருநாதரை அனுப்பி விட்டார்.

குருநாதர் கூறிய வார்த்தைகள் கூரிய வாளாக அவர் உள்ளத்தை அறுத்தன. தம்முடைய வம்சம் நாசமாகி விடுமோ என்று பயந்தார். ஆகவே அந்த வீட்டை விற்று விட்டு வேறு ஒரு புதிய வீடு கட்டினர். அந்த வீட்டில் எல்லாம் தேக்குமரங்களேயே பயன்படுத்தினர். ஒரு மூங்கில் கூட இல்லை. . --

வீடு கட்டி முடிந்ததும் கிருகப் பிரவேசம் நடந்தது. அப்போதும் தம்முடைய குருநாதரை அழைத்து வந்து காட்டினர். "இதில் ஒரு மூங்கில்கூட இல்லை' என்று சொன்னர். அந்தப் பிராமணர் என்ன சொன்னர் தெரியுமோ? "அப்படியா? இந்த வீடு நிர்வம்சமாக இருக் கிறதா?" என்ருர், மூங்கிலே இல்லாதது என்ற பொருளில் தான் அவர் சொன்னர். ஆல்ை அவர் முன்னே சொன்ன வார்த்தையில் சனி இருந்ததென்ருல் இந்த வார்த்தையில் நஞ்சல்லவா இருக்கிறது?

ஒரு வீட்டில் ஏதோ விருந்து; சிறிய விருந்துதான்;. ஐந்தாறு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வேறு ஒரு நண்பர் கட்டியிருக்கும் பங்களாவைப் பற்றிய பேச்சு வந்தது. “அந்தப் பங்களாவில் வரவேற்பு அறை இருக்கிறதே, அதை இன்றைக்கெல்லாம் பார்த்துக்

கொண்டிருக்கலாம்' என்ருர் ஒருவர். "அவர் பூஜை

அறையைப் பார்த்தீர்களோ? அது ஒரு சிறிய கோவில். அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/209&oldid=1153388" இலிருந்து மீள்விக்கப்பட்டது