பக்கம்:புது டயரி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

புது டயரி


ரூபாயைச் சந்தேகிக்கிறான் திருடன் என்று எண்ணி மனம் பொறாமல் முரடனுக்குக் கோபம் வந்தது. “ஏய், என்ன ஐயா பார்க்கிறாய் செல்லும் செல்லாததற்குச் செட்டியாரைக் கேள். அதோ அங்கே அவர் படுத்திருக்கிறார்” என்றானாம். மேலே என்ன நடந்தது என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அந்த முரடன் சொன்னது எல்லாம் உண்மை. ஆனால் சொல்ல வேண்டியது அவசியந்தானா?

பேராசிரியர் சுந்தரராமையர் என்பவர் பெரிய மேதாவி; கும்பகோணம் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். காந்தியடிகள் சத்தியாக்கிரகம் ஆரம்பித்த காலத்தில் அவரைச் சுந்தரராமையருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. ஏதோ ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். “இந்தக் காந்தி என்ன சொல்கிறான் என்றால் இப்படி யெல்லாம் சொல்கிறான்” என்று காந்தியடிகளை ஒருமையாகச் சொன்னார். கூட்டத்தில் இருந்த ஒருவர் அப்படிப் பேசக்கூடாது என்று சொன்னார். அப்போது பேராசிரியர், “நான் கடவுளேயே அவன் இவன் என்றுதான் சொல்கிறேன்” என்றார். ஆட்சேபித்தவர் உடனே, “டேய், சுந்தரராமா பேசினது போதும், உட்கார்டா” என்றார். பேச்சுக்குப் பதில் பேச்சு வந்துவிட்டது!

இப்படி இல்லாமல் சிலருடைய பேச்சுக் கேட்கக் கேட்க இனிமையாக இருக்கும். விரோதம்போல முதலில் தோன்றிப் பிறகு வியப்பையும் இன்பத்தையும் உண்டாக்கும்படி பேசுவர் சிலர். அந்தப் பேச்சில் முதலில் எத்தனைக் கெத்தனை ஐயமும் கோபமும் உண்டாகுமோ பிறகு அவ்வளவும் மாறி மகிழ்ச்சியும் மதிப்பும் உண்டாகும்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் என்பவர் பரமாசாரியராகத் திகழ்ந்த காலம் அது. மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/211&oldid=1153437" இலிருந்து மீள்விக்கப்பட்டது