பக்கம்:புது டயரி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

புது டயரி

 “டெலிபோன் வேண்டும்; நான் பொதுநல வேலைகளில் ஈடுபட்டவன். சொற்பொழிவாற்றுபவன்” என்று என் பிரதாபங்களையெல்லாம் எழுதி விண்ணப்பம் செய்து கொண்டேன். நான் எழுதியவற்றை ஒப்புக்கொண்டு எனக்கு ஒரு டெலிபோன் கொடுத்துவிட்டார்கள்.

டெலிபோன் என் வீட்டுக்கு வந்த அன்று ஏதோ ஒரு தேவதையே பிரசன்னமானது போன்ற உற்சாகம் எனக்கு. ஒரு பெருமிதம்; இனிமேல் உலகம் அத்தனையோடும் தொடர்பு வைத்துக்கொண்டு விடலாம் என்று ஒரு கற்பனை. முதல் நாள் டைரெக்டரியைப் பார்த்துப் பார்த்து எனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் பேசினேன். எனக்கு டெலிபோன் வந்துவிட்டதை வலியச் சொன்னேன். “நல்ல காரியம்; இனி எனக்கும் அலைச்சல் குறைவு” என்று சிலர் சொன்னார்கள். “இத்தனே நாள் வைத்துக் கொள்ளாதது பெரிய தப்பு” என்று நெருங்கிய நண்பர் ஒருவர் செல்லமாகக் கடிந்து கொண்டார்.

எங்கேயாவது வெளியிலே கூட்டங்களுக்குப்போவேன். யாராவது, “உங்களைப் பார்க்கவேண்டும், பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன்; ஒழியவே இல்லே. எப்போது வந்தால் செளகரியமாக இருக்கும்?” என்பார். நீங்கள் வந்து அலைய வேண்டிய அவசியமில்லை. டெலிபோனிலே பேசலாம்; எனக்கு டெலிபோன் இருக்கிறது” என்று சொல்லி டெலிபோன் எண்ணையும் சொல்வேன்.

எங்காவது டெலிபோன் உள்ள இடத்துக்குப் போனால், “கொஞ்சம் டெலிபோனில் பேசலாமா?” என்று கேட்பேன்; “தாராளமாகப்பேசுங்கள்” என்பார்கள். நான் என் வீட்டுக்கு டெலிபோன் பண்ணுவேன், என் மனைவி, “ஹலோ” என்று மெல்லிய குரலில் பேசுவாள். “யாராவது வந்தார்களா? டெலிபோன் ஏதாவது வந்ததா?” என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/217&oldid=1153458" இலிருந்து மீள்விக்கப்பட்டது