பக்கம்:புது டயரி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

புது டயரி


இப்போதும் யாரிடம் பேசினாலும் எனக்கு டெலிபோன் இருக்கிறதென்றும் எப்போது வேண்டுமானலும் பேசலாமென்றும் சொல்லி வைத்தேன். எத்தனையோ அலைச்சலை மிச்சப்படுத்திக் கொண்டதாகவே எண்ணினேன்.

எனக்கு டெலிபோன் இருப்பதை அன்பர்கள் அறிந்து கொண்டார்கள்; அடிக்கடி கூப்பிட்டார்கள். சாப்பிட்டுக் கொண்டிருப்பேன்; அப்போது டிரிங் டிரிங் என்று மணி அடிக்கும். குழந்தைகள் ஒடுவார்கள்; டெலிபோனை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டு, “அப்பா, அப்பா!” என்று கத்துவார்கள். “யாரோ கூப்பிடுகிறார்கள்; சீக்கிரம் சாப்பிட்டு வா” என்று கூவுவார்கள். டெலிபோனில் கூப்பிட்டவர் அந்தக் கூப்பாட்டைக் கேட்டிருப்பார்; அவர் சிரித்திருப்பார். அவசர அவசரமாகச் சாப்பிட்டு வந்து பேசுவேன்; ஒன்றும் இராது; ஏதோ தப்பு எண்ணாக இருக்கும்!

மத்தியான்ன வேளையில் அலுப்பாகக் கொஞ்சம் படுத்துக்கொள்ளலாம் எனறு கட்டையைக் கிடத்துவேன். அப்போது பார்த்து, ‘டிரிங், டிரிங்’ என்று அடிக்கும். இந்தச் சனியன ஏண்டா வைத்தோம்” என்று தோன்றும். டெலிபோனை எடுத்து வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் படுத்திருக்கலாம் என்று எண்ணுவேன். கழுத்தைத் திருகிப் போட்டால் பேச்சு வராது அல்லவா? அது போலத் தான் ‘ரிஸீவரை’ எடுத்துக் கீழே வைப்பேன். அரைமணி கழித்துப் பழையபடி வைத்துவிட்டால் ஓர் அன்பர் குறை கூறுவார். “அதென்ன ஸார், மணிக்கணக்காகக் கூப்பிடுகிறேன்; உங்கள் டெலிபோன் எப்போதும் இயங்கிய வண்ணமாகவே இருக்கிறது” என்பார். அவர் சொல்வது முக்கியமான சமாசாரமாக, உடனே புறப்பட்டுப் போக வேண்டிய காரியமாக இருக்கும். முன்பே தெரிந்திருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/219&oldid=1153468" இலிருந்து மீள்விக்கப்பட்டது