பக்கம்:புது டயரி.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

நம்முடைய வாழ்க்கையில் எத்தனையோ விதமான அநுபவங்களை நாம் பெறுகிறோம். பல்வேறு குணங்களையுடைய மனிதர்களோடு பழகுகிறோம், பிறருடைய பேதைமையையும் சாமர்த்தியத்தையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பங்கள் பல கிடைக்கின்றன. நம்முடைய பைத்தியக்காரத்தனத்தை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

இவற்றையெல்லாம் நேரிலே பார்க்கும்போது நமக்கு அந்த நிகழ்ச்சியினால் விளையும் விளைவுக்கு ஏற்ற உணர்ச்சி உண்டாகிறது. ஆனால் அந்த நிகழ்ச்சிகள் நடந்து பல காலத்துக்குப் பிறகு அவற்றைச் சிந்தித்துப் பார்த்தால், அவற்றில் உள்ள விசித்திரத்தன்மை புலனாகிறது. முன்பு அந்த நிகழ்ச்சியில் ஈடுபட்ட பாத்திரமாக இருந்ததனால் அதன் நேரடி விளைவே தெரிந்தது. இப்போதோ ஏதோ ஒரு நாடகத்தைப் பார்ப்பதுபோல, வேறாக நின்று பார்க்கிறபோது நமக்கு உண்டாகும் உணர்ச்சி வேறானது; ஒரு வாழ்க்கை வரலாற்றைப் படித்துச் சுவைப்பது போலத் தோன்றுகிறது.

இப்படி நிகழும் உலகியலில்தான் எத்தனை விசித்திரங்கள்! ஒரு சிறிய நிகழ்ச்சியானாலும், அதனோடு தொடர்புடையவர்களின் மனநிலையை இப்போது நினைத்துப் பார்த்தால் நமக்கு ஒருவகையில் பற்றற்ற உணர்ச்சியே உண்டாகிறது. நடந்தவற்றை எண்ணி எண்ணிப் புன்னகை பூக்கும் வகையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கும்

வாழ்க்கை அநுபவங்களில் இப்படி, நினைத்து சிரிக்கும் பகுதிகள் இருப்பதனால் நாம் தளர்ச்சியடையாமல் வாழ்கிறோம். “இடுக்கண் வருங்கால் நகுக” என்று திருவள்ளுவர் சொல்வது எவ்வளவு உயர்ந்த கருத்து முதலில் இடுக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/4&oldid=1153476" இலிருந்து மீள்விக்கப்பட்டது