பக்கம்:புது வெளிச்சம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



மொழியும் நூலும்


* கவிஞர் வெள்ளியங்காட்டான்

  • மொழியின் ஆக்க சக்தி, பேச்சிலோ கருத்துப் பரிமாற்றத்திலோ செய்தித்தாள்களின் அளவிலோ அடங்கி விடுவதல்ல. அகம் புறம் என அனைத்தையும் ஆய்ந்தறிந்த அழகும் ஆளுமையும் உள்ள நூல்களாக அமைந்து நம் எதிர்கால மக்களுக்கு வைப்புநிதியாக்கி வைப்பதில்தான் மொழியின் வளர்ச்சியும் வாழ்வும் உள்ளது.
  • நாம் நிலத்தைப் பயன்படுத்தி உரமிட்டு விதைத்து விளைந்த தானியம் நமக்கு உணவாவது போன்று நமது மொழியும் நூலும் நமக்குப் பயன்பட வேண்டும்.
  • எழுதி அச்சிட்டு வெளியிடப்படும் ஒவ்வொரு நூலும், உடலில் உடையில் உள்ள அழுக்கை நீக்கும் சோப்பைப் போல், உள்ளத்தின் எல்லா அழுக்கையும் நீக்குவதாக அமைதல் வேண்டும்.
  • காசைத் தேடுவதற்கான நூல்களுக்கு மட்டுமே ஒரு மொழி இடம் கொடுப்பதாயின், அம்மொழி மாசுபடிந்ததாகிவிட்டது என்று பொருள்.

நான் என் வாழ்வை மிகச் சரியானது எனப்படும் ஒரு நல்ல குறிக்கோளை நோக்கித்தான் இயக்கிக் கொண்டிருக்கிறேன். இதில் என் கவலை எல்லாம் அதைச் சென்று அடைய முடியவில்லையே என்பதல்ல. செல்லும் வழி எக்காரணத்தைக் கொண்டும் தவறிவிடக் கூடாதே என்பதுதான்.

viii

கவிஞர் வெள்ளியங்காட்டான்