பக்கம்:புது வெளிச்சம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



எமனுடைய பிரமை நீங்குமுன், அங்கு சிவகணங்களில் இருவர் அவசரமாக வருவது தென்பட்டது. அவர்களை வரவேற்று உபசரித்து ஆசனந் தந்து அமரச் செய்து, 'வந்த செய்தி என்ன என்று கேட்கவே, அவர்களில் ஒருவர் இந்த மகாத்மாவைக் கையோடு அழைத்துவரும்படி ஆண்டவன் உத்தரவு செய்துள்ளார் என்றார். இதைக்கேட்ட எமன் சித்திரபுத்திரன் முகத்தைக் கொஞ்சம் கடுகடுப்பாகப் பார்க்கலானான். சித்திர புத்திரன் புத்தி சரியாக வேலை செய்யவில்லையா என்று. ஆனால் சித்திரபுத்திரன் சற்று மலர்ந்த முகத்துடன் அதுதான் சரி; மிகவும் நல்லதாயிற்று, உடனே அனுப்பி விடுமாறு எமனைக் கேட்டுக்கொண்டான். இந்தப் பாவி, அந்த இரண்டு சிவகணங்களுடன் மூன்றாம் கணமாகி சிவலோகம் சென்று சேர்ந்தான்.

அவர்களை அனுப்பிவைத்தபின் எமன் கேட்டான். ‘என்னய்யா, சித்திரபுத்திரா! எல்லாம் புதிர் மாதிரி இருக்கிறதே! நீ சொன்னது ஒன்று; நடந்தது வேறொன்று. இதில் எது சரி, எது தப்பு’, என்று.

சித்திரகுப்தன் விளக்கினான் : நான் சரியாகவே கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறேன் பிரபு! நடந்த விசயம் இதுதான் : இவன் கடைசி மூச்சை விடும் முன் மகன் விருப்பத்தை நிறைவேற்ற மூன்று சொற்களைச் சொன்னான் : அதாவது ‘ஆக்கரா பிரகரா, சங்கரா என்று. அச்சொற்களின் பின்னால் வந்த மூன்று ஒலிகளும் (அரா, அரா, அரா) சிவபெருமானின் பெயராக அமைந்து விட்ட காரணத்தினால் இவனுடைய அனைத்துப் பாவங்களும் பரிகாரம் செய்யப்பட்டு மகாத்மா கலத்தில் பெயர்த்து எழுதப்பட்டது. சிவசாயுச்சமும் அவனுக்குப் பிராப்தமாயிற்று”, என்று.

எமனுக்கு ஒரே ஆச்சரியம்! அந்தச் சொற்களின் பொருள் தான் என்ன? எனக்கு அதில் ஒன்றும் புரியவில்லையே அப்பா என்று எமன் சித்திர புத்திரன் முகத்தை பார்த்ததும் சித்திரபுத்திரன் அதை விவரித்தான்.

‘ஆக்கரா' என்றால் பிறரிடமுள்ள பொருளைப் பறித்து கொள் என்று பொருள். 'பிரகரா’ என்றால், பொருளுக்குச் சொந்தக்காரன் எதிர்த்தால் கன்னத்தில் அறை, உதை, இடி, மிதி இதுபோல எதை வேண்டுமாயினும் செய் என்பது பொருள். சங்கரா என்றால்

புது வெளிச்சம்

95