பக்கம்:புது வெளிச்சம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இதற்கும் மசியவில்லையெனில் தீர்த்து கட்டு என்பது பொருள்' என்று விளக்கினான் சித்திர புத்திரன். இதைக் கேட்ட எமன் சபாஷ்! கைலாயம் அடைவது, சிவன் கிருபைக்கு பாத்திரனாவது இவ்வளவு சுலபத்தில் இருக்கிறதா? என்று உடல் பூரித்து மகிழ்ந்து கொண்டான். நம்முடைய சிரமத்தில் இந்தப் புதிய சட்டம் முக்கால் பங்கு குறைத்து விடுகிறதல்லவா! என்று.

விஷ்ணுவின் கதையும் இதுதானே. 'ராமா என்றால் அப்போதே பாவம் போக வேண்டியதுதான். ராமனுடைய காலில் பட்டதாகக் கல்லைப் பொன்னாக்கியதை தமிழ் நாட்டில் யார் அறியாதவர்.

எனவே பாவம் பெருகப் பெருக, வாழ்கின்றவர்கள் இனிச் சிரமப்பட வேண்டாமல்லவா. நல்லவர்களாக வாழ்பவர்கள்தான் அதிக சிரமத்திற்கு ஆளாக வேண்டி வருகிறது. பொருளின் பாதுகாப்பின்றி உடுத்திய ஆடையில் தூசு மாசு படிந்து விட்டது போன்று அவசியத்தின் நிமித்தம் சிறு சிறு தவறுகள் செய்திருந்தால் எம தண்டனைக்கும் உள்ளாக வேண்டுமல்லவா?

ஆம் பரோச்சம் மக்களிடையே ஒட்டிக் கொள்வதற்கு ஆதியில் சூழ்ச்சிக் கயவர் கையாண்ட தந்திரம் இதுதான். இன்னும் இது போன்றவைகள் சாபம், அனுக்கிரகம், மார்கண்டன், கண்ணப்பன், சிறுத்தொண்டன் பக்தர்கள் கதைகள் கொஞ்சமா? நம் அருமைத் தமிழ்நாட்டில். இந்த பக்தர்களின் குவியல் நூல்களுக்கிடையில் திருக்குறளையும், திருமந்திரத்தையும் கண்டுபிடிப்பதுதான் மலையைத் தோண்டி எலி பிடிப்பதைப் போன்றதாகிறது.

அருமை நண்பனே, சற்று சிந்தித்துப் பார், ஆன்மீகமெனின் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய ஆத்மாவை அறிந்து மேன்மைப்படுத்துவது என்பது பொருள். வெளியில் உள்ளவை ஜடப்பொருள். உயிர்ப் பொருளுக்கும் காரணமாக உள்ளவை. தெய்வங்களாகாதவை. மனிதராகிய நாமே தெய்வமாவதற் குரியவர்கள். எனவே நாம் செய்ய வேண்டியது நம்மை நாமறிந்து உண்மை பேசுதல், அறவழி ஒழுகல் மட்டுமே. எனவே இனி நாம் பரோச்சமாயிராமல் அபரோச்சமாய் இருக்க முற்படுவோமாக.

96 <

கவிஞர் வெள்ளியங்காட்டான்