பக்கம்:புது வெளிச்சம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இத்தகைய மகத்தான இந்தப் பிரம்மம் இருக்குமிடம் எது என்று நீ தெரிந்து கொள்ள விரும்புவாயல்லவா? அது கோயிலும் அல்ல; குன்றுகளுமல்ல; வானமும் அல்ல வையகமுமல்ல. ஹ்ருதிஹ் - யேஷ ஆத்மா” இந்த ஜீவாத்மா இருதயத்தில் உறைகிறான் என்பது அதன்பொருள்.

'இந்த ஜீவாத்மா அல்லது பிரம்மம் எப்படியிருப்பான் எத்தகையவனாயிருப்பான் எனின் அதை முன்டகோபநிசத்து விவரிக்கிறது.

"திவ்யோ - ஹ்யமூர்த்த: புருஷர்: ஸ பாஹ்யாப்யந்தரோ - ஹ்யஜ: அப்ராரோ - ஹ்யமணா: சுப்ரோ ஹ்யrரத் - பரத்ப் பர: என்று. இதன்பொருள் : அப்பரமபுருஷன் ஒளி நிறைந்தவன், உருவில்லாதவன், உள்ளும் புறமும் ஒருங்கே உள்ளவன், பிறவாதவன், பிராணனில்லாதவன், மனதில்லாதவன், பரிசுத்தன், மேலான அச்சரப் பிரம்மத்திற்கும் மேலானவன்'.

மேலும் துல்லியமாக விளக்க வேண்டுமெனில் அதற்கு வேறு ஒரு மார்க்கமும் உண்டு. எவ்வாறெனில் பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் எனப்படும் பூதங்கள் வெளியே நம் கண்ணுக்கும் புலனறிவிற்கும் தோற்றப் பகுதியாக அமைந்துள்ள இதை சமஷ்டி அதாவது ஏகமாக ஒன்றோடு ஒன்று சேர்ந்துள்ளன. இவைகளே நம்முடல், உயிர் உள்ளம், ஆத்மா என வியஷ்டி அதாவது பிரிந்த நிலையில் அமைந்துள்ளன.

வெளியே எந்த முறையில் அமைந்துள்ளதோ அதே முறையில்தான் நம் உடலிலும் அமைந்துள்ளன. அது சரியானதே ஆகும். நிலத்தின்கண் உள்ள 16க்கு மேல் மேற்பட்ட பெளதிக ரசாயன சாரங்கள்தான் நம் உடல். கீழே நிலத்தோடு கூடியுள்ள நீர் தனக்கு மேலே உள்ள நெருப்போடும் சம்பந்தம் கொண்டுள்ளது. நீரோடு சம்பந்தம் கொண்டுள்ள நெருப்பு தான் காற்றோடு சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ளது. நெருப்போடு சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ள காற்று ஆகாயத்தோடும் சம்பந்தம் வைத்துக் கொண்டுள்ளது. அனைத்துக்கும் இடமாக அமைந்துள்ளது ஆகாயம்.