பக்கம்:புது வெளிச்சம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
22

ஜோதிசம்


"வேத தர்ம சாஸ்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவை” என்கிறார் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள். செப்டம்பர் 1987 தினமணி நாளிதழில் அவருடைய அருளுரை - (ஆம்அந்த உரை தினமணி ஆசிரியருக்கு அருளுரை)யின் தலைப்பில் படித்தறிந்தேன். பாதுகாக்கப்பட வேண்டியவை வேத தர்ம சாஸ்திரங்கள் மட்டும் தானா? மக்கள் தேசம், வாழ்க்கை, கலாச்சாரம், அமைதி, ஆனந்தம் என மற்றுமுள்ள அனைத்தையும் விடப் பாதுகாக்கப்பட வேண்டியவைதானா இந்த வேத தர்ம சாஸ்திரங்கள்?

அப்படியே அவர் அவற்றைப் பாதுகாத்துக் கொண்டு வரட்டும்

➢108

கவிஞர் வெள்ளியங்காட்டான்