பக்கம்:புது வெளிச்சம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாரும் வேண்டாம் எனச் சொல்லவே மாட்டார்கள். ஆனால் அந்த வேதம் தர்மசாஸ்திரங்களைத் தமிழர்கள் எதற்காகக் காப்பாற்றுவதில் பங்கு பற்ற வேண்டும்? என்பதுதான் எனக்கு விளங்குமாறில்லை.

தமிழ்நாட்டை மட்டுமன்று: காஸ்மீரத்திலிருந்து கன்னியாகுமரிவரை, இந்த வேத தர்மசாஸ்திரங்களை நம்பிப் பின்பற்றி இந்து மதத்தினரான நம்மை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அந்நியர்களுக்கு அடிமைப்படுத்திவைத்தது என்பது பொய்யல்லவே. மனித வாழ்வையே சர்வநாச்ப்ப்டுத்தி இன்றளவும் ஏன் நாளைக்கும் கூட அப்படி வைத்திருக்கவே இன்னும் காத்திருக்கிறது என்பதும் பொய்யாகாதே!

ஆம்! இது அருளுரையன்று, தலையிலிருந்து கால்வரையும் தூய மருளுரை என்று சாந்தோக்கிய உபநிசத்து சாட்சி சொல்கிறது

ஜனத்குமாரரை அணுகி நாதமுனிவர் வேண்டிக் கொள்கிறார்!

‘ஐயனே! உபதேசம் செய்தருளும் என்று உமக்கு ஏற்கனவே என்ன தெரியுமோ அதைத் தெரிவியும்; அதற்குப் பின் உமக்கு உபதேசிப்போம்” என்கிறார், ஜனத்குமாரர்.

‘ஐயனே ருக்வேதம் தெரியும்; யஜுர்வேதம், ஸாமவேதம், நான்காவதாக அதர்வன வேதம், ஐந்தாவதாக இதிகாச புராணம், வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதிருகல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், காலநிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருக்தம், சிட்சையாகிய வேதநூல் பூதவித்காத, போர்முறை, எல்லாம் கற்றுள்ளேன். ஐயனே!

'ஆயினும் நான், ஐயனே! மந்திரங்களை மட்டும் அறிந்தவனேயன்றி ஆத்மாவை அறிந்தவனல்லன். ஆத்மாவை யறிந்தவனே சோகத்தைக் கடப்பான் என்று தேவரீரைப் போன்றவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். நான் சோகத்திற்குட் பட்டிருக்கிறேன். ஐயனே என்னைத் தேவரீர் சோகத்தைத் தாண்டும்படி செய்விக்க வேண்டும்' என்றார்.

நாரதரின் இந்த வேண்டுகோளுக்கு ஜனத்குமார் சொல்வது

புது வெளிச்சம்

109